ஆட்டோ ஓட்டுனர்களின் பிரச்சினைகளை கூறும்.. கன்னி மாடம்.. டிரெண்டிங்காகும் ஸ்னீக் பீக் !

Recommended Video

Kanni Maadam movie Sneak Peek recieving positive response

சென்னை : கன்னி மாடம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி, இதுவரை 31 ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கும் முதல் படம் தான் கன்னிமாடம். இந்த படத்தை தயாரித்து இருக்கிறார் முகமது ஹசீர். படத்தில் ஶ்ரீராம் கார்த்திக் ,சயா தேவி , ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

 Kanni maadam movie sneak peek out

நடிகர் போஸ் மெட்டிஒலி தொடரில் ஆரம்பித்து தீரன் அதிகாரம் வரை தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர் அதிகபடியான படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களிலே நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது இவர் இயக்கியிருக்கும் கன்னி மாடம் படத்தில் இருந்து ஒரு சிறிய காட்சி ஸீனீக் பீக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சியில் போலீஸ்காரர் ஒருவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்துவது போலும், ஆட்டோவில் இருக்கும் பெண்ணை பார்த்து தவறான நோக்கத்தில் நடக்க முயற்சி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டு, இறுதியில் உண்மையை உணர்ந்த போலீஸ்காரர் அங்கிருந்து சென்று விடுகிறார்.

 Kanni maadam movie sneak peek out

கன்னி மாடம் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்கையை பற்றிய கதை என பட விளம்பரங்களிலே கூறப்பட்டது. அதே நேரத்தில் போலீசை கெட்டவர்களாக காட்டாமல் அவர்களின் இயல்பை பதிவு செய்திருக்கிறது கன்னி மாடம் படம். இந்த காட்சி வெளியான சிறிது நேரத்திலேயே டிரெண்டாகி விட்டது. இதுவரை சுமார் 31 ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

காதல் ,சமூகம், சண்டை என பல விசயங்கள் கன்னி மாடம் படத்தில் இருக்கிறது. இந்த படத்தை போஸ் வெங்கட் ஒரு முயற்சியை கையில் எடுத்து பல உண்மைகளையும் கோர்த்தே படமாக்கியிருக்கிறார் .

கன்னி மாடம் படத்தை ரூபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த நிறுவனம் இதற்கு முன் விதார்த்தின் வண்டி படத்தை தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் படங்களையே தயாரித்து வருகிறது. கன்னிமாடம் படத்தின் மூலம் சிறந்த நடிகராக இருந்த போஸ் வெங்கட் சிறந்த இயக்குனராக உள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது. இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர் பாடியிருக்கும் மூனு காலு வாகனம் பாடல் பெரிய அளவில் வெற்றிஅடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X