நல்ல படங்களை தயாரிக்க.. தமிழகத்தில் கால்பதிக்கும்.. மலையாள தயாரிப்பாளர் ஹசீர்
Recommended Video
சென்னை :நல்ல படங்களை தயாரிக்க தமிழகத்தில் கால்பதித்திருக்கிறார் மலையாள தயாரிப்பாளர் ஹசீர்.
நடிகர் போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் படம் தான் கன்னி மாடம். இந்த படம் பிப்ரவரி21 வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் ரூபி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது.

ரூபி பிலிம்ஸ் முகமது ஹசீர் கன்னிமாடம் மற்றும் இதற்கு முன் விதார்த்தின் வண்டி ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். வருடம் முழுக்க வித்தியாசமான படங்களையும் நல்ல வெற்றி படங்களையும் கொடுத்து வரும் மலையாள சினிமாத்துறையில் படம் தயாரிக்கும் வாய்ப்பு இருந்தும், தமிழ் சினிமாவில் வந்து தேடி தேடி நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் முகமது ஹசீர் .

படத்தில் நடித்த கலைஞர்களும் அவரை பற்றி தெரிந்த பலரும் கூறியது. இவர் கேரளாவில் இருந்து நல்ல படங்களை தயாரிக்க வந்திருக்கும் தயாரிப்பாளர். முக்கியமாக இவர் தமிழில் நல்ல படங்களை தயாரிக்க நினைத்தது நல்ல விசயம் என்று பாராட்டினர் .

கன்னி மாடம் சமூகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களின் பிரச்சனையையும் சமூக பிரச்சனைகளையும் கலந்து அதனுடன் நல்ல காதலையும் சொல்லி படமாக்கபட்டிருக்கிறது. சிறந்த நடிகரை இயக்குனராக அறிமுகப்படுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் ஹசீர்.

கன்னி மாடம் படத்தில் பல நல்ல விசயங்கள் இருக்கிறது. படம் பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டியிருக்கின்றனர். கன்னி மாடம் படத்தில் ஶ்ரீராம் கார்த்திக், சாயா தேவி ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். படத்தை சிறந்த முறையில் தயாரித்து இருக்கிறார் முகமது ஹசீர்.
தயாரிப்பாளர்கள் எந்த படத்தின் வெற்றிக்கும் பெரிய அளவில் பாராட்டபடுவதில்லை என்பது கொஞ்சம் கடினமான விசயம். அது இந்த படத்தில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











