காதல் வலிகளை உணர்த்தும் கன்னி மாடம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
Recommended Video
சென்னை: போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகி உள்ள கன்னி மாடம் படம் இன்று வெளியாகி உள்ளது.
மாஃபியா, பாரம், மீண்டும் ஒரு மரியாதை, காட் ஃபாதர் என பல படங்களுடன் போட்டியாக கன்னி மாடம் படமும் ரிலீஸ் ஆகியுள்ளது.
காதல், சைரத், பரியேறும் பெருமாள் படங்களின் வரிசையில், உருவாகி உள்ள இந்த படத்திற்கு நெட்டிசன்கள் என்ன விமர்சனம் வைத்துள்ளனர் என்பதை இங்கே காணலாம்..

போஸ் வெங்கட் வாழ்க்கை
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட், ஆரம்ப காலத்தில் ஆட்டோ ஓட்டுநராக தனது சென்னை வாழ்க்கையை தொடங்கி உள்ளார். கன்னி மாடம் படத்தில் வரும் பல காட்சிகள் போஸ் வெங்கட்டின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது போலத்தான் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காமெடி சூப்பர்
ஆடுகளம் முருகதாஸ் இந்த படத்தில் அருமையாக காமெடியில் கலக்கி உள்ளார். இசையமைப்பாளர் ஹரி சாய் அமைத்துள்ள மெலோடி பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. இயக்குநராக அறிமுகமாகி உள்ள போஸ் வெங்கட், தனது திறமையான திரைக்கதையால் மக்களை ஈர்க்கிறார். காதல், சைரத் படங்களை கொண்டாடிய ரசிகர்கள், இந்த படத்தையும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணவ கொலை
காதலுக்கு எதிராக செய்யப்படும் ஆணவக் கொலைகளை இந்த கன்னி மாடம் திரைப்படம் அழுத்தம் திருத்தமாக மனதை வருடும் விதமாக பதிவு செய்துள்ளது. இயக்குநராக போஸ் வெங்கட் பாஸ் மார்க் வாங்கி உள்ளார். ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் சாயா தேவியின் நடிப்பு ரியலிஸ்டிக்காக உள்ளது என இந்த விமர்சகர் விமர்சித்துள்ளார்.
80/100
தமிழ் சினிமாவின் பிரபல விமர்சகரான இடிஸ் பிரசாந்த், கன்னி மாடம் படத்துக்கு, 80/100 என்ற மதிப்பெண்ணை கொடுத்து, படத்தை புகழ்ந்து தள்ளி உள்ளார். தனது முதல் படத்திலேயே இயக்குநர் போஸ் வெங்கட், நல்ல தரமான படத்தையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார் என விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











