“கன்னிமாடம்”... இயக்குநராக மாறிய பிரபல நடிகர்!
நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக மாறி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்.
திருமுருகனின் மெட்டி ஒலி சீரியலில் போஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால், சாதாரண வெங்கட், போஸ் வெங்கட் ஆனார். பின்னர் கவன், கோ என குறிப்பிடத்தகுந்த படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் கன்னி மாடம் எனும் படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, " பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும்.

கன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும். நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களை படம் பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்கு சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, 'நேட்டிவிட்டி' காரணிகளுக்காக இந்த இடங்களில் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்.
இசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்து பாடல்களும் 'மாண்டேஜ்' முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ ஷங்கர் பாடியுள்ளார். அந்தோணி தாசன் ஒரு பாடலை பாடியுள்ளார்", என அவர் கூறினார்.
கன்னி மாடம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications











