இயக்குநராக அறிமுகமாகும் போஸ் வெங்கட்.. ரெடியாயிருங்க மக்களே.. நாளைக்கு ரிலீஸ் ஆகுது கன்னிமாடம்!

Recommended Video

Kanni maadam Preview show | A Bose Venkat film | Hari Sai |Rooby Films

சென்னை: நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கி இருக்கும் கன்னிமாடம் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது.

நடிகர் போஸ் வெங்கட் மெட்டி ஒலி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த சீரியலில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

Kanni Madam movie will be released tomorrow

எதார்த்தமான அவரது போஸ் கதாப்பாத்திரம் ரசிக்கும் வகையில் இருந்தது. இதனால் வெங்கட் என்ற தனது பெயருக்கு முன்னால் போஸ் என்ற பெயரை சேர்த்து போஸ் வெங்கட் என்றானார்.

தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் போஸ் வெங்கட். சிங்கம் படத்தில் சின்சியரான போலீஸ் அதிகாரியாக நடித்து கவர்ந்திருப்பார் போஸ்.

இந்நிலையில் நடிகர் போஸ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். கன்னி மாடம் எனும் படத்தை அவர் இயக்கியுள்ளார் போஸ் வெங்கட்.

இந்த படத்தை ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கிறார் கன்னிமாடம் படத்தில் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக்கும், நாயகியாக சாயா தேவியும் நடித்துள்ளனர். மேலும், ஆடுகளம் முருகதாஸ், ரோபோ சங்கரின் மனைவி, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இதுவரை போஸ் வெங்கட்டை நடிகராக பார்த்த மக்கள் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X