தம்பதி சமேதராக… கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்து கூறிய சினேகன் தம்பதி !
சென்னை : சினேகன், கன்னிகா ரவி தம்பதியினர் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
கன்னிகா ரவி பாடலாசிரியரும், நடிகருமான சினேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதிகள் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

கன்னிகா ரவி
நடிகை கன்னிகா ரவி கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அழுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். கல்யாண வீடு சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பல படங்களில்
சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சரித்திரம் பேசு, தாயின் மடியில், சத்திரபதி, ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்றவன் , அடுத்த சட்டை, தேவராட்டம் போன்ற பலத் திரைப்படங்களில் கன்னிகா ரவி நடித்துள்ளார்.

திருமண நாள்
கன்னிகா ரவி நடிகராக மட்டும் இல்லாம் எழுவது, சிலம்பம் சுற்றுவது என பல துறைகளில் கைதேர்ந்தவர். இவர் சமையல் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர் பாடல் ஆசிரியர், நடிகரான சினேகனை 8 ஆண்டுகளான காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி உலக நாயகன் கமலஹாசன் முன்னிலையில் நடைபெற்றது.

கையில் டாட்டூ
சமீபத்தில் கன்னிகா ரவி தனது கணவரின் பெயரை கையில் பச்சை குத்திக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதேபோல சினேகனும் தனது மனைவி கன்னிகாவின் பெயரை பச்சை குத்திக்கொண்ட வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
தீபத்திருநாள் வாழ்த்து
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபத் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி தம்பதி சமேதராக தீபத்திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு பலர் லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











