Snehan: சினேகனுக்கு கன்னிகா கொடுத்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?

சென்னை: நடிகை கன்னிகா தனது காதல் கணவருக்கு பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பரிசு ஒன்றை கொடுத்து அசத்தி உள்ளார்.

திரைத்துறையில் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா ரவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் காதலித்த விஷயம் சமூகவலைதளத்தில் தெரியவந்த போது பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கவிஞர் சினேகன்: சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித் திரையாக இருந்தாலும் சரி அங்கே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது காலங்காலமாக நடந்து கொண்டு வந்தாலும், பல திருமணங்கள் வாழ்க்கையில் துவக்கத்திலேயே காணாமல் போய்விடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதியில் முறித்துக் கொண்டு விடுகின்றனர்.

Kannikas surprise gift for snehan Birthday

தனி மரியாதை: ஆனால், ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய காதலை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கும் அவர்கள் மீது தனி மரியாதை வந்து விடுகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக கன்னிகா சினேகன் ஜோடி இருந்து வருகின்றனர்.

காதல் திருமணம்: கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுடைய துறையில் தாங்கள் சாதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக தங்களுக்குள் இருக்கும் காதலை வெளியுலகத்திற்கு காட்டிக்கொள்ளாமல் மறைத்து. பின் பல வருட காத்திருந்து கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.

பிறந்த நாள் பரிசு: திருமணத்திற்குப் பிறகு இவர்கள் போட்டோஷூட், வீடியோ என இருவரும் பிஸியாகவே இருக்கிறார்கள் குறிப்பாக, கன்னிகா இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது, கன்னிகா தனது காதல் கணவர் சினேகனின் பிறந்த நாளுக்கு ஸ்போர்ட் சைக்கிளை வாங்கிக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இந்த வீடியோவை கன்னிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தவீடியோவைப் பார்த்த பேன்ஸ் சினேகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X