எனக்கு பிடிச்ச நடிகை அவங்கதான்.. ஓபனா பேசிய கன்னிமாடம் நாயகி சாயா தேவி!
சென்னை: கன்னிமாடம் படத்தின் நாயகி சாயாதேவி தன்னுடைய இன்ஸ்பைரேஷன் குறித்தும் தனக்கு பிடித்த நடிகை குறித்தும் பேசியிருக்கிறார்.
Recommended Video
நடிகரான போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம் கன்னி மாடம். முதல் படத்திலேயே மக்கள் மனதில் இயக்குநராக வரவேற்பை பெற்று விட்டார் போஸ் வெங்கட்.

இந்தப் படத்தில் ஹீரோவாக ஸ்ரீராம் கார்த்திக்கும் ஹீரோயினாக சாயா தேவியும் நடித்துள்ளனர். புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர்.
குறிப்பாக சாயாதேவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சாயாதேவி, தனக்கு பிடித்த நடிகை குறித்தும் தன்னுடைய ரோல் மாடல் குறித்தும் பேசியிருக்கிறார்.
அதாவது சாயாதேவிக்கு பிடித்த நடிகை, நஸ்ரியாவாம். அவருடைய க்யூட்டான நடிப்பு தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நஸ்ரியா போன்ற நல்ல நடிகையாக வேண்டும் என்றும் சாயா தேவி தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











