Don't Miss!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- News 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! 2019 முடிவை எதிர்க்கட்சிகள் முறியடிக்குமா?
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’!
வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கன்னித்தீவு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
Recommended Video
சென்னை: கிருத்திகா புரொடக்ஷன் தயாரிக்கும் 'கன்னித்தீவு' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.
திரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'கர்ஜனை' படத்தினை இயக்கிய சுந்தர் பாலு, அடுத்ததாக இயக்கும் படம் 'கன்னித்தீவு'. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.
சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.
கன்னித்தீவு என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான காமிக்ஸ் தொடராகும். இதில் வரும் நாயகனின் பெயர் சிந்துபாத். ஏற்கனவே சிந்துபாத் என்ற பெயரில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னித்தீவு என்ற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.