விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதா இது... அடடா தெரியாம போச்சே!
சென்னை: இன்று வெளியாகியுள்ள கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் சேதுபதி தான் என்ற தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன் தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு துணை நடிகராக தனது திரை பயணத்தை ஆரம்பித்து அவர் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்.

மக்கள் செல்வன் என்று தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுவர். துல்கர் சல்மான், ரக்ஷன், ரித்து வர்மா இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் இப்படத்தை தேசிங்கு பெரிய சாமி இயக்கியுள்ளார் மசாலா காபி பாடல் குழு இதற்கு இசை அமைத்துள்ளனர்.

இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக ஒரு படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த கதாபாத்திரம் முதன் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்காக அணுகினோம். அவரின் கால் ஷீட் கிடைக்காததால் அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனனை அணுகினோம் அவர் உடனே ஓகே என்று கூறிவிட்டார்.

ஒரு நாள் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் ரக்ஷன் இயக்குனரிடம் சென்று விஜய் சேதுபதி வருகிறார் என்று கூறினாராம். உடனே இயக்குனர் விஜய் சேதுபதியா என்று ஆச்சரியப்பட்டு வெளியே சென்று பார்த்தால் அங்கு கேராவான் ஓரமாக விஜய் சேதுபதி நின்று கொண்டு இருந்தாராம், அவர் என்னிடம் வந்து மன்னித்து விடுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறினார் என்னால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் என்று இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி கூறினார்.
எவ்வளவு தான் இருந்தாலும் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் விஜய் சேதுபதியின் பணிவு, குணம், பெருந்தன்மை அனைத்தும் மாறவில்லை அதனால் தான் அவர் மக்கள் செல்வன்.


Click it and Unblock the Notifications











