வாவ்.. என்ன சொல்றீங்க.. மீண்டும் தியேட்டரில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. எங்கே தெரியுமா?
சென்னை: லாக்டவுனால் உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் தியேட்டரில் ரிலீசாகிறது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'.
Recommended Video
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு நேரடி தமிழ் படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசான அந்த படம் பலரது பாரட்டுக்களை அள்ளி வெற்றி நடைபோட்டது.

பிளாக்பஸ்டர்
2020ம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான தர்பார், பட்டாஸ் படங்கள் சொதப்பிய நிலையில், ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் நன்றாகவே ஓடியது. அதற்கு பின்னர் ரிலீசான துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' வித்தியாசமான கதைக் களத்துடன் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று இதுவரை இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக கொண்டாடப்படுகிறது.

தியேட்டர்கள் மூடல்
துல்கர் சல்மான், ரிது வர்மா, கெளதம் மேனன், ரக்ஷன், நிரஞ்சனி நடிப்பில் பிப்ரவரி 28ம் தேதி வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தியேட்டரில் 100 நாட்கள் ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மத்தியில் போடப்பட்ட லாக்டவுனால், ஒரே மாதம் கூட தியேட்டரில் ஓடாமல் நின்று போனது.

மீண்டும் தியேட்டரில்
ஐக்கிய அரபு நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை தொடங்கி மீண்டும் தியேட்டர்கள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரிலீசான பல படங்களுக்கு மத்தியில் தமிழ் படமான துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' துபாய் தியேட்டரில் ரிலீசாகி இருக்கிறது.

மிகுந்த பாதுகாப்புடன்
மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் தியேட்டர்கள் செயல்பட தொடங்கி இருக்கின்றன. சில ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுடன் மலையாள படங்களான டிரான்ஸ் மற்றும் ஃபாரன்ஸிக் படங்களும் நேற்று ரிலீசாகின.

காத்திருக்கின்றன
இந்த ஆண்டு கோடை விடுமுறை முன்னிட்டு தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, விக்ரமின் கோப்ரா, தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாக்டவுன் காரணத்தால் அனைத்தும் ரிலீசாகாமல், லாக்டவுன் எப்போது முடியும் மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











