TRPயில் கெத்து காட்டிய.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!

ஹைதராபாத் : பொதுவாக தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் TRPயை எகிற வைத்து வந்த காலம் போய் தற்போது தமிழ் படங்கள் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மாஸ் காட்டி வருகிறது.

இதற்குமுன் தெலுங்கில் வெளியான பாகுபலி மற்றும் ஹிந்தியில் வெளியான டங்கல் போன்ற திரைப்படங்கள் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்டது.

இந்நிலையில் தமிழில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று தற்போது தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய TRPயை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பிரமாதப்படுத்தி வருகின்றனர்

பிரமாதப்படுத்தி வருகின்றனர்

நாளுக்கு நாள் தமிழ் திரைப்படத்துறையில் புது புது இயக்குனர்கள் புதுமுகங்களை அறிமுகம் செய்து பல புதுமையான கதைகளைக் கொண்டு வந்து தமிழ் திரைப்படத்துறையை இன்னும் ஒரு படி மேலே கொண்டுபோய் இந்திய அளவில் பிரமாதப்படுத்தி வருகின்றனர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

இந்த நிலையில் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், H.வினோத் போன்ற இளம் இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தற்போது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

எதிர்பாராத கதைக்களத்தில்

எதிர்பாராத கதைக்களத்தில்

இந்த ஆண்டு வெளியான பல படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் யாரும் சற்றும் எதிர்பாராத கதைக் களத்தில் இறங்கி திரையரங்குகளில் செம காட்டு காட்டி இருக்கிறது.

மிகப்பெரிய வெற்றிப் படம்

மிகப்பெரிய வெற்றிப் படம்

புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி முதன்முதலாக இயக்கிய இந்தப் படம் இளமை துள்ளலுடன் கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளுடன் விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும்

குடும்பங்கள் கொண்டாடும்

மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான், கௌதம் வாசுதேவ் மேனன், ரிது வர்மா, ரக்சன் மற்றும் நிரஞ்சனா அகத்தியன் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் அனைத்து வகையான பார்வையாளர்களையும் ரசிக்க வைத்து தமிழில் குடும்பங்கள் கொண்டாடும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

7.1 TRP ரேட்டிங்

7.1 TRP ரேட்டிங்

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் தெலுங்கு உரிமையை பெற்ற பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சமீபத்தில் இந்த திரைப்படத்தை ஒளிபரப்பியது. இவ்வாறு ஒளிபரப்பப்பட்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் அதிகமான வாடிக்கையாளர்களால் பார்க்கப்பட்டு 7.1 என்ற கணக்கில் TRP யை பெற்று இதுவரை இருந்த TRP ரேட்டிங்கை முறியடித்து தற்பொழுது இந்த படம் TRP யில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

மாஸ் காட்டி

மாஸ் காட்டி

இதற்கு முன் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகி TRPயை எகிற வைத்து வந்த நிலையில் தற்போது தமிழ் படங்கள் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மாஸ் காட்டி வருவது தமிழ் ரசிகர்களையும் தமிழ் திரைப்படத் துறையையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X