துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்… டி.வியில் பார்க்கலாம்!

சென்னை : ரசிகர்களின் மனம் கவர்ந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Recommended Video

Kannum Kannum Kollaiyadithaal On Netflix | Dulquer Salman | Desingh Periyasamy

2020ன் மார்ச் வரை தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகின. இதில் பல படங்கள் வெற்றி அடைந்தது சில படங்கள் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. 2020ன் சிறந்த ஒரு படத்தை கூறுங்கள் என்று யாரையாவது கேட்டால் சட்டென்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை கூறுவார்கள் .

 Kannum kannum Kollaiyadithaal tomorrow on vijay tv

கடந்த மூன்று மாதங்களில் வந்துள்ள சிறந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இதே நேரத்தில் இந்த வருடத்தின் இறுதியில் பல படங்கள் வந்தாலும் அதில் சிறந்த படங்களை எடுத்து பார்த்தலும் அதிலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இடம் பெறும். அந்த அளவுக்கு சிறப்பான படம் இது.

 Kannum kannum Kollaiyadithaal tomorrow on vijay tv

தமிழகத்தில் பிப்ரவரி 28 வெளியான படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது. கொரன்டைன் ஆரம்பிக்கும் முன் திரையரங்குகள் முடங்கும் வரை கூட ரசிகர்களால் படம் பார்க்கபட்டு வந்தது. இதனையடுத்து, தமிழ் புத்தாண்டான நாளை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது .

நாளை மதியம் 2.30 மணியளவில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த படத்தைக்காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும், இந்த படத்தை பார்க்க துல்கரின் ரசிகர் பட்டாளங்களும் காத்திருப்பதாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

 Kannum kannum Kollaiyadithaal tomorrow on vijay tv

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பல விதங்களில் சிறப்பம்சம் கொண்டது. நடிகர் துல்கர் சல்மானின் 25வது படம் இதுவாகும். துல்கருக்கு கேரளாவில் பெரிய மார்கெட் இருந்தும் தனது 25வது படத்தை நேரடியாக தமிழில் நடித்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது .

இந்த படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமியின் முதல் படம் இது தான். ஆனால் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சிறப்பாக இயக்கியிருப்பார். மேலும் இந்த படத்தில் நடித்த ரக்ஷ்னுக்கு இதுதான் முதல் படமாகும் மேலும் ரீட்டு வர்மாவிற்கு தமிழில் நாயகியாக இது தான் முதல் படம் .

 Kannum kannum Kollaiyadithaal tomorrow on vijay tv

இதற்கு முன் கௌதம் மேனன் பல படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் கௌதம் மேனன் தனது ஸ்டைலில் அசத்தியிருந்தார். கௌதம் மேனன் இந்த ஒட்டுமொத்த படத்தை மிக திறமையாக நடித்து தாங்கி பிடித்தார் என்றே சொல்லலாம் .

இதை அனைத்தையும் தாண்டி படம் மக்களுக்கு மிகவும் பிடிக்க காரணம் படத்தின் திரைக்கதை. சீட் எட்ஜ் த்ரில்லராக அமைந்த திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .நாளை படம் ஒளிப்பரப்பாவதால் படக்குழுவும் இதை பற்றி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X