”கடவுளுக்கு நன்றி” கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் ட்வீட்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமியை பாராட்டி உள்ளார்.
Recommended Video
துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

லாக்டவுனுக்கு முன்னதாக
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதம் வெளியான படங்கள் எல்லாம் ரொம்பவே புண்ணியம் செய்த படங்களாகவே கருதப்படுகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில் திரையுலகமே சிக்கி உள்ள நிலையில், லாக்டவுனுக்கு முன்னதாக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிப்ரவரி 28ம் தேதி வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தியேட்டர்கள் மூடுவதற்கு முன்னதாக சிறப்பாக ஓடி தப்பித்தது.

செம டைட்டில்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற டைட்டிலுக்கு ஏற்ப நாயகனும், நாயகியும் மாற்றி மாற்றி ஃபிராடுத் தனமும் ஹைடெக்காக திருட்டுத் தனமும் பண்ணுபவர்களா இருக்கின்றனர். கடைசி வரையில் திருந்தாமல், நவயுக திருடர்களை பிரதிபலிக்கும் விதமாக இந்த படத்தை இயக்குநர் உருவாக்கிய நிலையில், வெற்றியும் பெற்றார்.

கடவுளுக்கு நன்றி
"சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு" என்ற பாராட்டு வார்த்தைகளை திடீரென கேட்டதும், காலையில் இருந்து காத்துல பறந்துட்டு இருக்கிற மாதிரி இருப்பதாகவும், "கடவுளுக்கு நன்றி" என்றும் அந்த படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி ட்வீட் போட்டுள்ளார்.

யார் அந்த கடவுள்
யார் அந்த கடவுள் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வராமல் இருக்க, கூடவே பாபா முத்திரை எமோஜிகளை பதிவிட்டு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் சூப்பராக அந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும், இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு தெரிவித்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் அவர் ட்வீட்டுக்கு கீழே, வாழ்த்தி கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

தலைவர் ஆசிர்வாதம்
"வாவ் தலைவர் ஆசிர்வாதம்.. வாழ்த்துக்கள் ப்ரோ மகிழ்ச்சி, கடவுளும் துணை இருப்பார், தலைவர் ரஜினியும் துணை இருப்பார், நல்லதே நடக்கும், வாழ்த்துகள் சார், தலைவர் வாழ்த்து சொன்ன தருணம் என்பதே உங்கள் கருத்தில் தெரிகிறது. மேலும், சிகரம் தொட வாழ்த்துக்கள் என ரஜினி ரசிகர்கள் வரிசை கட்டி வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











