மாலத்தீவில் ஹனிமூனை கொண்டாடும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடி.. திணறடிக்கும் போட்டோஸ்!

சென்னை: அண்மையில் திருமணம் முடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட ஜோடி மாலத்தீவில் ஹனிமூனை கொண்டாடி வருகிறது.

கடந்த ஆண்டு துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி அகத்தியன்.

ரக்ஷனுக்கு ஜோடியாக

ரக்ஷனுக்கு ஜோடியாக

நிரஞ்சனி பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் ஆவார். இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாகவும் நடிகர் ரஷ்னுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

ரஜினிகாந்த் வாழ்த்து

பல அதிரடித் திருப்பங்களை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

பிப்ரவரியில் திருமணம்

பிப்ரவரியில் திருமணம்

இந்நிலையில் நடிகை நிரஞ்சனியும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

மாலத்தீவில் ஹனிமூன்

மாலத்தீவில் ஹனிமூன்

அவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் தங்களின் ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி வருகின்றனர். மாலத்தீவில் பீச் ஹவுஸில் இருக்கும் போட்டோக்களை நிரஞ்சனி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துளளார்.

பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஹனிமூன் கொண்டாட்டமா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் சந்தோஷமாய் இருங்கள் என்றும் எங்கள் தலயை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இடத்தை விடவும் அழகு

இடத்தை விடவும் அழகு

நிரஞ்சனி லுப் வைத்த மேக்ஸி கவுனை அணிந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்தை விடவும் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் நிரஞ்சனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X