இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு கல்யாண பரிசாக காரை பரிசளித்த தயாரிப்பாளர்!

சென்னை : இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

நடிகையும் ஃபேஷன் டிசைனரான நிரஞ்சனி அகத்தியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாண்டிச்சேரியில் மிக பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடந்தேறிய நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட தயாரிப்பாளர் அண்டோ ஜோசப் இவர்களுக்கு கல்யாண பரிசாக புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

எதிர்பார்ப்பும் இல்லாமல்

எதிர்பார்ப்பும் இல்லாமல்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய முதல் திரைப்படத்திலேயே சிக்சரை அடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சக்கைபோடு போட்ட இந்த திரைப்படம் மாபெரும் வசூலை அள்ளியது.

தனக்காக ஒரு கதை

தனக்காக ஒரு கதை

இந்த நிலையில் தனது இரண்டாவது திரைப்படத்திற்காக முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து பாராட்டிய தோடு தனக்காக ஒரு கதை ஒன்றையும் தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 காதல் திருமணம்

காதல் திருமணம்

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்த நடிகையும் பிரபல ஃபேஷன் டிசைனருமான நிரஞ்சனி அகத்தியன் என்பவரை கடந்த சில மாதமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் பாண்டிச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் நேரில் சென்றும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

திருமண பரிசாக புதிய கார்

திருமண பரிசாக புதிய கார்

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட தயாரிப்பாளர் அண்டோ ஜோசப் இயக்குனர் தேசிங் பெரியசாமி நிரஞ்சனி தம்பதிக்கு திருமண பரிசாக புதிய கார் ஒன்றை பரிசு அளித்துள்ள புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவரின் அடுத்த திரைப்படத்தையும் தயாரிப்பாளர் அண்டோ ஜோசப் தயாரிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X