அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. காந்தாரா ஹீரோயினுக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பு!
பெங்களூரு: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. அதில், நடித்த நடிகர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் நாயகி சப்தமி கவுடா அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்கிற ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.
காந்தாரா திரைப்படம் பஞ்சுருளி எனும் கிராம தேவதையின் கதையை மையமாக வைத்து காட்டில் வாழும் மனிதர்களுக்கே காடு சொந்தமானது என்கிற கதையை மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இறை நம்பிக்கையுடன் சொல்லி இருந்தது.
ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த படம் இறுதி நாமினேஷனில் தேர்வாகவில்லை.

சப்தமி கவுடா அறிமுகம்
ஜூன் 8, 1996ம் ஆண்டு பிறந்த கன்னட நடிகை சப்தமி கவுடா பாப்கார்ன் மங்கி டைகர் எனும் படத்தின் மூலம் கடந்த 2019ல் திரையுலகில் அறிமுகமானார். நடிகை சப்தமி கவுடாவின் தந்தை உமேஷ் எஸ்கே டோடி அசிஸ்டன்ட் கமிஷனராக காவல்துறையில் பணியாற்றி வருகிறார். படிப்பை முடித்து விட்டு சாஃப்ட்வேர் நிறுவனமான அசென்சரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு மாடலிங்கில் ஆர்வம் ஏற்பட்டநிலையில் சினிமா வாய்ப்புகள் வர நடித்து வருகிறார்.

காந்தாரா ஹீரோயின்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் சப்தமி கவுடா. காவல் துறையில் வேலை கிடைத்த நிலையில், ஊர் மக்களுக்கு எதிராக காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு அந்த கிராமத்தை காலி செய்யும் பணிகளில் அவர் ஈடுபடும் காட்சிகளும் ஊர் மக்கள் அவரை திட்டித் தீர்க்கும் காட்சிகளும் ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தன.

பாலிவுட் வாய்ப்பு
காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில், அதில் நடித்த நடிகை சப்தமி கவுடாவுக்கு பாலிவுட்டில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படத்தில் அவர் நடித்து வருகிறாராம்.

காந்தாரா டு காஷ்மீர் ஃபைல்ஸ்
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி அடுத்ததாக வேக்ஸின் வார் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காலத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி எந்தளவுக்கு மக்களை காப்பாற்ற பயன்பட்டது என்கிற கதையை உருவாக்கி வரும் விவேக் அக்னிஹோத்ரியின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் சப்தமி கவுடா.

ஹீரோயின் இல்லை
சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த சப்தமி கவுடாவிடம் வேக்ஸின் வார் படத்தில் என்ன மாதிரியான ரோலில் நடிக்கிறீங்க இந்த பாலிவுட் வாய்ப்பை எப்படி பார்க்குறீங்க என்கிற கேள்விக்கு, விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மாதிரியான பெரிய இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் யாருமே ஹீரோ, ஹீரோயின் இல்லை. எனக்கு கொடுத்துள்ள பகுதியை சிறப்பாக செய்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications