Kantara Chapter 1 1st Week Collection: முதல் வாரத்திலேயே இத்தனை கோடிகளா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாச்சு!

சென்னை: கடந்த வாரம் வெளியான படங்களில் இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால் அது காந்தாரா சாப்டர் 1. இந்த படம் ஏற்கனவே வெளியான காந்தாரா படத்தின் ப்ரீகுவல் கதை. படத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த், ஜெய்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் கடந்த வாரம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் நேரடி கன்னடப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில் முதல் வார வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Kantara Chapter 1 1st Week official Box Office Collection Movie Joins 500 Crore Club in World Wide
Photo Credit:

அதாவது படம் முதல் வாரத்தில் ரூபாய் 509.25 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ளது என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் முதல் வாரத்திலேயே ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டதால், தீபாவளி வரைக்கும் படத்திற்கு பெரிய அளவில் போட்டி இல்லை. எனவே படம் தீபாவளிக்குள் குறைந்தது ரூபாய் 800 கோடிகள் முதல் ரூபாய் 900 கோடிகளுக்குள் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று பேசப்படுகிறது.

காந்தாரா படமே மிகப்பெரிய வெற்றியை அடைந்ததால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாகவே ஒரு படம் வணிகரீதியாக வெற்றி பெறுகிறது என்றால், அது படம் வார இறுதி நாட்களை கடந்து வார நாட்களிலும் வசூல் குவிக்க வேண்டும். இப்படி இருக்கும்போதுதான் அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ஈட்டும்.இந்த வரிசையில்தான் தற்போது காந்தாரா சாப்டர் 1 படமும் இணைந்துள்ளது. அதாவது படம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியானது. நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை ஒட்டி படம் வெளியாகி இருந்தாலும் இந்தப் படத்தில் வரும் வன தெய்வமும் அதன் வழிபாட்டு முறையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனாலே படத்திற்கு பெரிய வெற்றி கிடைத்தது என்று கூறலாம்.

பாராட்டு: அதேபோல் இந்த படத்தில் அந்த வன தெய்வத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கி உள்ளார் ரிஷப் ஷெட்டி. படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் சி.ஜி வேலைகளை பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தின் திரைக்கதையே மிகவும் நேர்த்தியாகவும் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையிலும் உருவாக்கி படத்தை எடுத்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X