ரூ1000 கோடியை தட்டி தூக்குமா? சினிமாவிற்கே ஒரு கம்பேக் மூவி காந்தாரா சாப்டர் 1.. மொத்த வசூல் விவரம்!
சென்னை: காந்தாரா போல காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரம்மாண்டத்தால் விழிகளை விரிய வைத்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி படத்தை கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் 2ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படம், ஓடிடியிலும் மாஸ் காட்டி வருகிறது. இப்படத்தின் மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான 'காந்தாரா சாப்டர் 1' 2022 ஆம் ஆண்டில் வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் ப்ரீக்வெல் ஆகும். 'காந்தாரா சாப்டர் 1' வெளியாகி முதல் பாகத்தை விடவும் பெரிய அளவில் வசூலை ஈட்டி உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த்,ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ரகேஷ் பூஜாரி, பிரகாஷ் துமினாட் ஆகியோர் நடித்துள்ளனர்.

புதிய சாதனை படைத்தது: 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.61 கோடிக்கும் மேல் வசூலித்தது. மூன்று நாட்களில் ரூ. 160 கோடிக்கு மேல் வசூலித்தது, இந்தியத் திரையுலகில் ஒரு புதிய சாதனை எனத் திரையுலக வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். தியேட்டரில் சக்கைப்போடு போட்ட அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 31ந் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ஓடிடியிலும் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இப்படம் உள்ளது.
காந்தாரா படத்தின் மொத்த வசூல்: கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் படம் வெளியானது. இந்நிலையில் 'காந்தாரா சாப்டர் 1' படம் வெளியாகி 5 வாரங்கள் ஆகி இருக்கும் நிலையில், படக்குழு, படம் ரூ. 883 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரித்து ரூ1000 கோடிகிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மகத்தான வெற்றியின் மூலம் ரிஷப் ஷெட்டி மீண்டும் ஒரு பான்-இந்திய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











