twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தாரா பட இயக்குநருடன் ரஜினி திடீர் சந்திப்பு..இந்தியாவின் மிகச்சிறந்த படம் என பாராட்டு!

    |

    சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசினார்.

    கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. அண்மையில் திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

    இப்படத்தில் ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

    லைகாவின் இரண்டு படங்களில் ரஜினி… நவம்பர் 5ம் தேதி 'தலைவர் 170’ பூஜை… இயக்குநர் யார்?லைகாவின் இரண்டு படங்களில் ரஜினி… நவம்பர் 5ம் தேதி 'தலைவர் 170’ பூஜை… இயக்குநர் யார்?

    தமிழில் ரிலீஸ்

    தமிழில் ரிலீஸ்

    காந்தாரா கன்னட திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்து வியந்து போன நடிகர் தனுஷ், பிரபாஸ், கார்த்தி, பிருத்விராஜ் என ஏராளமான பிரபலங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என புகழ்ந்தனர்.

    காந்தாரா கதை

    காந்தாரா கதை

    அரசர் நிம்மதியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார் அப்போது அப்பகுதி மக்கள் கடவுளை வழிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு பல ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துவிடுகிறார். இதற்குப் பிறகு 1970களில் அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலத்தை மக்களிடமிருந்து மீட்க திட்டம்போடுகிறான். ஆனால், அங்கிருக்கும் கடவுள் அவரை எச்சரிக்கை செய்து தடுத்து, அவனை கொன்றுவிடுகிறது.

    த்ரில்லர் கதை

    த்ரில்லர் கதை

    இதற்குப் பிறகு, 1990ல் பண்ணையார் ஒருவர் அந்த நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க நினைக்கிறார். மற்றொரு பக்கம், காப்புக் காடுகளை அளந்து மக்களை வெளியேற்றப்போவதாகக் கூறுகிறது வனத்துறை. அந்த மக்கள் வணங்கும் தெய்வம் என்ன செய்தது.. அப்பகுதி மக்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் கதை.

    சிறந்த படைப்பு

    சிறந்த படைப்பு

    இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில், தெரிந்ததைக் காட்டிலும் தெரியாததே அதிகம். அதை இப்படத்தைக் காட்டிலும் யாராலும் சொல்லியிருக்க முடியாது. இப்படத்தைப் பார்த்தேன். என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்திய சினிமாவின் சிறந்த படைப்பு எனப் புகழ்ந்து, ரிஷப் ஷெட்டி, உள்ளிட்ட நடிகர்களை பாராட்டி இருந்தார்.

    ரஜினியுடன் சந்திப்பு

    ரஜினியுடன் சந்திப்பு

    இதையடுத்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் ரிஷப் அவர்களுக்கு போன் செய்து படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி ரஜினியிடம் கொடுத்துள்ளார். ரிஷப் மற்றும் ரஜினி நீண்ட நேரம் கன்னடத்திலேயே பேசி இருந்துள்ளனர். ரஜினி சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு ரிஷபை அழைத்துள்ளார். இதையடுத்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசி ஆசி பெற்றுக்கொண்டார். நீண்ட நேரம் ரிஷப்புடன் உரையாடிய ரஜினிகாந்த் இந்தியாவின் மிகச்சிறந்த படம் காந்தாரா என்று புகழ்ந்தார். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    English summary
    kantara film director Rishabh Shetty met superstar Rajinikanth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X