கல்கி காரை ஓட்டிய காந்தாரா ஹீரோ.. கர்நாடகாவிலும் தாறுமாறு புரமோஷன்.. பிரபாஸ் பயங்கர ஹேப்பி!

பெங்களூர்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தை டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் மட்டுமே புரோமோஷன் செய்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை மற்றும் பெங்களூர் என பல்வேறு பகுதிகளில் புரமோஷனை கல்கி 2898 ஏடி படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் அந்த படத்தை புரமோட் செய்ய சரியான ஆள் காந்தாரா ஹீரோ தான் என்பதை புரிந்து கொண்ட படக்குழு அவரை வைத்து தாறுமாறு புரமோஷனை தற்போது செய்துள்ளனர்.

Rishab Shetty Kalki Prabhas

கல்கி படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் பல இடங்களில் அசுர வேகத்தில் நிரம்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவைத் தாண்டி ஓவர்சீஸில் பிரபாஸின் கல்கி படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது டிக்கெட் முன்பதிவை பார்த்தாலே தெரிகிறது.

காந்தாரா ஹீரோ: காந்தாரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநரும் நடிகருமான ரிஷப் செட்டி தற்போது கல்கி படத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட புஜ்ஜி காரை ஓட்டி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கல்கி படத்தை புரமோட் செய்ய சரியான ஆளை படக்குழு தேர்வு செய்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். கிச்சா சுதீப், யஷ் உள்ளிட்ட பிரபலங்களை விட கர்நாடகாவில் சமீப காலமாக அதிக ரசிகர்களை ஈர்த்து வருவது ரிஷப் சக்திதான் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தாரா 2 படத்திற்கும் இந்திய ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

சூடு பறக்கும் டிக்கெட் புக்கிங்: கல்கி 2898 ஏடி படத்தின் பட்ஜெட்டே 600 கோடி ரூபாய் என்பதால் மிகப்பெரிய அளவில் அந்தப் படத்திற்கான புரமோஷனை படக்குழுவினர் செய்து வருகின்றனர். 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியாக வேண்டும் என்கிற நிர்பந்தம் உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களை அணுகி கல்கி படத்தை புரமோட் செய்து வருகின்றனர்.

சிம்பு புரமோஷன்: தமிழ்நாட்டில் ஏற்கனவே அந்த படத்தில் கமல்ஹாசன், பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் நிலையில் நிச்சயம் ரசிகர்கள் அந்த படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் கல்கி படத்தின் ஃபைனல் வார் டிரைலரை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து படக்குழுவினரை வாழ்த்தினார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த ட்ரெய்லரை வெளியிட்டு பாராட்டினார். இப்படி அனைத்து இடங்களிலும் கடைசி நேரத்தில் புரமோஷனை டாப் கியரில் கல்கி படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: rishab shetty kalki prabhas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X