நிக்கோலாய் ஆபத்தானவர்?.. முதல் மனைவிக்கு டார்ச்சர்.. சிக்கல் வரும்.. வரலட்சுமியை எச்சரித்த பிரபலம்
சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் கணவர் குறித்து மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சி தரக்கூடியவையாக இருக்கின்றன.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்துவருகிறார். பெரும் கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே நல்ல பழக்கம் இருக்கிறது. அவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை நிக்கோலாய் திறம்பட கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி விவாகரத்து: நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர். அதனையடுத்து சில மாதங்களுக்கு நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
திருமணம்: தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி இருவரது திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.அதில் இரு வீட்டாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த ரிசப்ஷனுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.
காந்தராஜ் பேட்டி: இந்நிலையில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் குறித்து மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நிக்கோலாய் ஆபத்தானவராகக்கூட இருக்கலாம். முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சர் கொடுத்திருக்கலாம். அதோடு பல பெண்களுடன் தொடர்பிலும் இருக்கலாம். இந்தத் திருமணத்துக்கு சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி வரவில்லை. ஒருவேளை சாயாதேவியை சரியான வகையில் வரலட்சுமி நடத்தாமல் இருந்திருக்கலாம்.
குழந்தைக்கு சிக்கல்: நிக்கோலாய் சச்தேவ்வை வரலட்சுமி தனது 39ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இது ஒரு லேட் மேரேஜ் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.இந்தியாவில் இவர்களது திருமணம் நடந்திருந்தால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்பதை அடுத்து தாய்லாந்தில் திருமணத்தை நடத்தியிருக்கலாம். திருமண வயதில் நிக்கோலாய்க்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார்.
தவறாக நினைப்பார்கள்: சூழல் இப்படி இருக்க இப்போது இன்னொரு பெண்ணை நிக்கோலாய் திருமணம் செய்துகொள்வது தவறாக கருதப்படும் அல்லவா?. இந்தத் திருமணம் ஒரு சமூக பாதுகாப்புக்காகத்தான் நடந்திருக்கிறது. இதில் எந்தக் காதலும் இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். பல பெண்களோடு அவருக்கு தொடர்பும் இருந்திருக்கலாம்" என்றார். இந்த விஷயம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதேசமயம் திருமணம் என்பது இருவர் சம்மந்தப்பட்டது. இதில் ஏன் காந்தராஜ் தேவையில்லாமல் தலையிட்டு தனது யூகங்களை கூற வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன.


Click it and Unblock the Notifications











