போயஸ் கார்டன் வீட்டை தனுஷ் இப்படித்தான் கட்டினாரா?.. காந்தராஜ் என்ன இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பங்கேற்க போயஸ் கார்டன் வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அந்த வீட்டின் கிரக பிரவேசத்தின் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தே விட்டனர்.
நடிகர் தனுஷ் பற்றி சுசித்ரா அளித்த பேட்டிகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பின. ஆனால், அதையும் தாண்டி தனுஷை ரொம்பவே பாதித்தது அந்த போயஸ் கார்டன் வீடு தான். அதனால் தான் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போயஸ் கார்டனில் நானெல்லாம் வீடு கட்டக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி போயஸ் கார்டனில் வீடு கட்டும் ஆசை எப்படி வந்தது என்பதற்கும் ஒரு கதை சொல்லியிருந்தார்.

இந்நிலையில், மறுபடியும் சினிமா வட்டாரத்தில் தனுஷின் போயஸ் கார்டன் வீடு தொடர்பான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. செய்யாறு பாலு, காந்தராஜ் உள்ளிட்ட பலர் இதுதொடர்பாக பேட்டிகளில் பேசி வருகின்றனர்.
50 கோடியை கடந்த ராயன்: தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் இந்தியளவில் 52 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் ராயன் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். முதல் 3 நாட்களில் இருந்த வேகம் திங்கட்கிழமை அப்படியே குறைந்து விட்ட நிலையில், இந்த வாரம் பிக்கப் ஆகுமா? என்பது சந்தேகம் தான்.
பல படங்கள் போட்டி: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி என பல படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதிகளவிலான காட்சிகள் அந்த படங்களுக்கு சென்று விடும் என தெரிகிறது. அடுத்த வாரம் அந்தகன் மற்றும் மின்மினி படங்கள் வெளியாகின்றன.
தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்: பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய தனுஷ் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் தெலுங்கில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார் என்றும் மேலும், சில பெரிய பேனர்களில் மட்டும் நடித்து வருகிறார் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தை சில தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்ட நிலையில் தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் ஒன்றை விட்டது. அதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர்கள் பணத்தில் வீடு: நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டியுள்ள பங்களா தயாரிப்பாளர்களின் பணத்தில் கட்டியது தான் என்றும் அந்த தயாரிப்பாளர்களை தனுஷ் ஏமாற்றலாமா? என்றும் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மூத்த பத்திரிகையாளர்களான செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் தனுஷின் போயஸ் கார்டன் வீடு கட்ட காரணமாக இருந்த தயாரிப்பாளர்களை தனுஷ் தவிக்க விடுவது நியாயமான செயல் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
வட்டி மேல் வட்டி: படங்களை தயாரிக்க வட்டிக்கு பணம் வாங்கி கோடிக் கணக்கில் நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு, கால தாமதம் ஆகும் சூழலில் தயாரிப்பாளர்கள் தான் வட்டிக்கு மேல் வட்டி கட்டி வருகின்றனர் என்றும் கூறுகின்றனர். முன்னணி நடிகர்களே இப்படி தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொள்ளாமல் செயல்படுவது சினிமாவுக்கு அழகு இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











