தனுஷின் உண்மையான பெற்றோர் யார்? பிறந்த நாள் அதுவுமா? பல உண்மைகளை உடைத்த பிரபலம்!
சென்னை: திரைத்துறையே வியந்து பார்க்கும் அளவிற்கு தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் எந்த அளவிற்கு வளர்ந்து உள்ளாரே, அதைவிட அதிகமாக இவர் மீது பலவிதமான விமர்சனங்கள், கிசுகிசுக்கள், வதந்திகள் பரவின. அதில் முக்கியமான ஒன்று நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்றும் மதுரையைச் சேரந்த தம்பதி ஒருவர் வழக்கு தொடுத்தது தான். இப்படி தனுஷ் குறித்து வந்த பல விமர்சனம் குறித்து சினிமா விமர்சகர் காந்தராஜ் பேசி உள்ளார்.
அதில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் - மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறிய நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இந்த வழக்கே பெரிய இடத்து பையன், ஏதாவது பணம் கிடைக்கும் என்பதற்காகத்தான் போடப்பட்டது.

பணத்திற்காக: எந்த மகனாவது அப்பா அம்மா தெரியாமல் வளர்வார்களா? இது தனுஷ் பள்ளியில் படிக்கும் போது அவர்கள் வரவில்லை. நடிகராகி பிரபலமான பின் தான் என் மகன் என்று உரிமை கொண்டாடினர். இது ஊடகங்களுக்கு ஒரு செய்தியாக கிடைத்துவிட்டதால், அந்த செய்தியை பெரிய செய்தியாக்கி விட்டார்கள். அப்படித்தான் தனுஷ், ராயன் இசை வெளியீட்டு விழாவில், நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன் என்று பேசி இருந்தார். அப்படி எல்லாம் பேசினால் ஒரு சுவாரசியம் இருக்கும், அனைவரும் வியந்து பார்ப்பார்கள் என்பதற்கான பேசப்படுகிற விஷயம்.
மீடியாவிற்காக பேசுவது: தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு தயாரிப்பாளர் அவரின் மகன் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டார் என்று சொல்வது, மீடியாவிற்காக சொல்லப்படும் விஷயம். தனுஷை தவிர, அவரது குடும்பத்தில் அனைவரும் நன்றாக படித்தார்கள் இவர் தான், படிக்க பிடிக்காமல் சினிமாவில் நடிக்க வந்தார். ஆனால், அவர்கள் அனைவரையும் விட, தனுஷூக்கு நல்ல ராசி அமைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டார்.
நம்ப முடியாத திருமணம்: ஆனால், இந்த திருமணம் யாருமே நம்பமுடியாத ஒரு திருமணமாக இருந்தது ஏன் என்றால், செல்வராகவன் படத்திலோ கஸ்தூரி ராஜா படத்திலோ ரஜினி நடித்தது இல்லை. அப்படி இருக்கும் போது கஸ்தூரி ராஜா குடும்பத்துடன் அவருக்கு எந்த வகையில் பழக்கம் ஏற்பட்டது என்று பெரியவில்லை. அது மட்டுமில்லாமல் தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் நடக்கும் போது, தனுஷ் பெரிய ஹீரோவும் கிடையாது. இப்படி இருக்கும் போது, ரஜினி எப்படி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் என்று தெரியவில்லை. இவர்களின் திருமணம் எப்படி ஒரு புரியாத மர்மமாக இருக்கிறதோ அதே போலத்தான் அவர்களின் விவாகரத்தும் இருக்கிறது.
ரஜினியின் சாயல்: இதில் மிகப்பெரிய விஷயமே அப்பா, அம்மா பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இரண்டு மகன்களும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடன் இருக்கிறார்கள் அதை பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது. அதே போல பெரிய மகன் யாத்ரா, ரஜினி இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதே சாயலில் இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், எனக்கு தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை பார்த்துவிட்டே ஆடிப்போய் விட்டேன். தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல நடிகர், இயக்குநர் கிடைத்து இருக்கிறார் என்று நினைத்தேன் என்று டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











