twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரம்மாண்டமாக தயாராகும் ராட்சத மனிதக்குரங்கு திரைப்படம்… சிறப்புக்காட்சி !

    |

    சென்னை: இந்தியாவின் அதுவும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ராட்சத மனிதகுரங்கு சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாக உள்ளது.

    இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    செம்ம ஷாட்...யோகி பாபுவுடன் கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த் செம்ம ஷாட்...யோகி பாபுவுடன் கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த்

    இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாக உள்ளது.

    மெய்சிலிர்க்கும் காட்சிகள்

    ராட்சத காட்ஷீலா, ராட்சத திமிங்கலம், ராட்சத குரங்கு போன்ற படங்களை நாம் ஹாலிவுட்டில் தான் பார்த்து இருக்கிறோம். ஸ்டீவன் ஸ்பில் பேர்க் இயக்கத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் , ஜுராசிங்க் வேல்ர்ட், ஜுராசிங்க பார்க் ஃபாலன் கிங்டம் போன்ற படங்களில் வரும் ராட்சத விலங்குகளை பார்த்து வியந்து இருக்கும். அதே போல பிராம் பெய்டன் இயக்கத்தில் உருவான ராம்பேஜ் திரைப்படத்தில் பல காட்சிகளை நம்மை மெய்சிலிர்க்க வைத்து இருக்கும்.

    சூப்பர் ஹீரோ

    சூப்பர் ஹீரோ

    இது எல்லாம், ஹாலிவுட்டில் தான் சாத்தியமா நம்ம நாட்டுல முடியாது என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில், அதுவும் தமிழ் தயாரிப்பாளர்களின் உருவாக்கத்தில் ஒரு பிரம்மாண்ட மனிதகுரங்கு சூப்பர் ஹீரோ படம் விரைவில் உருவாக உள்ளது.

    வேறலெவலில்

    கபி திரைப்படம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வேறலெவலில் உருவாகி வருகிறது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராதா, ராம நாரயணன் மற்றும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்க உள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கபி படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி தற்போது யூடியூபில் வெளியாகி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

    4 மொழிகளில்

    கௌஷிக் கர்ரா மற்றும் என்.ராமசாமி எழுதிய இந்த கதைக்கு ஆக்க வடிவம் கொடுத்து இயக்கியுள்ளார் கோகுல்ராஜ் பாஸ்கர். இந்த படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் Giant Super Hero படமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகிறது.

    Read more about: libra productions
    English summary
    Kapi india’s First Giant super Hero
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X