கபீர்கானின் கைவண்ணத்தில் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு.. "83"!

By Vignesh Selvaraj

மும்பை : கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' 2019-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் வரிசையில் தோனி, மேரிகோம், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரையடுத்து தற்போது கபில்தேவ் இணைந்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, WWE இந்திய வீரர் கிரேட் காளி ஆகியோரது வாழ்க்கையும் படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை நாயகன்

உலகக்கோப்பை நாயகன்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இவர் தலைமையில்தான் முதன்முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதனால், இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கபில்தேவின் வாழ்க்கை படமாக இருக்கிறது.

ரன்வீர் சிங் ஹீரோ

ரன்வீர் சிங் ஹீரோ

இயக்குனர் கபீர்கான் கபில்தேவ் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளார். அதற்கு அவர் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கடைசியாக பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை பேன்தோம் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

கிரிக்கெட் மோகம்

கிரிக்கெட் மோகம்

கபில்தேவ் தலைமையில் 1983-ல் உலகக் கோப்பை வென்றபிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் வெகுவாக அதிகரித்தது. இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத மனிதரான கபில் தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு '83' என்று பெயர் வைத்துள்ளனர்.

2019 ரிலீஸ்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த '83' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2018 இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் 83 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 2019ம் ஆண்டு, ஏப்ரல் 5-ம் தேதி படத்தை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X