twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    '83' படத்தில் கபில்தேவின் அந்த சாதனைதான் ஹைலைட்டாம்... விஷூவல் இல்லாத ஆட்டம்... விறுவிறுப்பான டீம்!

    By
    |

    சென்னை: '83' படத்தில், கபில்தேவின் சாதனை ஆட்டம்தான் படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது.

    கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார்.

    மூன்று மொழிகளில்

    மூன்று மொழிகளில்

    மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது.

    ஜீவா தோற்றம்

    ஜீவா தோற்றம்

    '83' படத்தில் ஜீவாவின் தோற்றம் சமீபத்தில் வெளியானது. மேலும் சில நடிகர்களின் தோற்றங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்துரியின் விப்ரி மீடியா, அனுராக் காஷ்யப்பின் பான்டோம் பிலிம்ஸ், ரிலையன்ஸ்,நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின் மென்ட், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

    தமிழில் கமல்ஹாசன்

    தமிழில் கமல்ஹாசன்

    ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இதில் கபில்தேவ், ரன்வீர் சிங், இயக்குனர் கபீர்கான் உட்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

    சாதனை ஆட்டம்

    சாதனை ஆட்டம்

    இந்நிலையில் இந்தப் படத்தில் கபில்தேவ் சாதனை ஆட்டத்தை ஹைலைட்டாக வைத்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில், ஜிம்பாப்வே-க்கு எதிராக ஆட்டமிழக்காமல் 138 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார் கபில்தேவ். 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணி, கபில்தேவ் விளாசலால் வெற்றி பெற்றது.

    ஹைலைட்

    ஹைலைட்


    போட்டி நடந்த அன்று பிபிசி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாலும் அன்று வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணியின் போட்டி நடந்ததாலும் கபிலின் சாதனை, பதிவு செய்யப்படவில்லை.
    இந்தப் போட்டியை, அப்போது இந்திய அணி மற்றும் ஜிம்பாப்வே அணியில் ஆடியவர்களிடம் கேட்டு '83' படத்தில் வைத்துள்ளனர். இதுதான் படத்தில் ஹைலைட்டான விஷயம் என்று கூறப்படுகிறது.

    English summary
    Kapil Dev's match-changing 175 against Zimbabwe in the 1983 World Cup had no video coverage because The BBC was on strike on that day and missed the whirlwind knock. sources said, this achievement is highlight in 83 movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X