'மனைவியை ஹேப்பியா வச்சிக்கிறது எப்படி’.. புதுமாப்பிள்ளைக்கு பிரபல நடிகர் சொன்ன ‘குரு மந்திரம்’!
அமிதாப்பின் கோன் பனேகா குரோர்பதி 10வது சீசன் நிறைவுக்கு வந்துள்ளது.
மும்பை: மனைவியை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்ற கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இதன் கிராண்ட் பினாலேவில் பிரபல காமெடி நடிகர் கபில் சர்மா கலந்து கொண்டார்.

அப்போது அவர் அமிதாப்பிடம், 'மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான குரு மந்திரத்தை சொல்லித் தாருங்கள்' எனக் கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அமிதாப், 'மனைவி என்ன சொன்னாலும் சாரி எனச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம்' என்றார்.
இந்த பதிலை கபில் சர்மா உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனர்.
கபில் சர்மாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அவர் தனது நீண்ட நாள் காதலியான கின்னி சத்ராத்தை மணந்து கொள்ள இருக்கிறார். விரைவில் புதுமாப்பிள்ளையாகப் போகும் கபில் சர்மாவுக்கு அமிதாப் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











