விமானத்தில் குடிபோதையில் சக நடிகரை தாக்கிய பிரபல காமெடி நடிகர்

By Siva

மும்பை: காமெடி நடிகர் கபில் சர்மா குடிபோதையில் விமானத்தில் சக நடிகரை திட்டி தாக்கியுள்ளார்.

காமெடி நடிகர் கபில் சர்மா சோனி தொலைக்காட்சி சேனலில் தி கபில் சர்மா ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் குத்தியாக நடித்து வரும் சுனில் குரோவர்.

கபில் சர்மா ஷோ குழு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

விமானம்

விமானம்

கபில் சர்மா குழு ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் மும்பை திரும்பியது. கபில் குடிபோதையில் விமானத்தில் சுனிலை வம்புக்கு இழுத்து தரக்குறைவாக பேசி ரகளை செய்துள்ளார்.

சுனில்

சுனில்

கபில் போதையில் செய்வது தெரியாது சுனிலை சக பயணிகள் முன்பு தாக்கியுள்ளார். இதை பார்த்த சிப்பந்திகள் ஓடி வந்து கபிலை அடக்கினர். நடந்த சம்பவத்திற்காக சுனில் தான் சக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

கபில்

கபில்

விமானத்தில் செய்த ரகளை மற்றும் சுனிலை தாக்கியது குறித்து கபில் கண்டுகொள்ளவே இல்லை. இந்த சம்பவத்தால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவு

ஆதரவு

கபில் சர்மா முன்பு கலர்ஸ் டிவியில் நிகழ்ச்சி நடத்தினார். அவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தான் சோனி சேனலுக்கு வந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக இருந்தவர் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X