மும்பையை பாம்பேனு சொன்னது ஒரு குத்தமா? நடிகரிடம் சண்டைக்கு போன அரசியல்வாதி.. நல்லவேளை நாம தப்பிச்சோம்!

பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, தனது நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியான 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ'வில் "மும்பை" என்பதற்குப் பதிலாக "பாம்பே" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) கட்சி இதைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

MNS கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமேயா கோப்கர், கபில் சர்மாவின் இந்தச் செயல் மும்பை நகரத்திற்கும், அதன் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பு எனக் கருதுகிறார். இனிமேல் பழைய பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கபில் சர்மா தற்போது தனது பிரபலமான நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நெட்ஃபிக்ஸில் தொகுத்து வழங்கி வருகிறார். ஷில்பா மற்றும் ஷமிதா ஷெட்டி, ஹுமா குரேஷி, சாகிப் சலீம் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் கிளிப்பை அமேயா கோப்கர், 'X' தளத்தில் பகிர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Kapil Sharma In Trouble MNS Warns Comedian After He Calls Mumbai Bombay on The Great Indian Kapil Show 3 Netflix
Photo Credit:

அந்த நிகழ்ச்சியின் போது, ஹுமா குரேஷி தனது சகோதரருடனான பிணைப்பைப் பற்றி பேசும்போது மும்பையை "பாம்பே" என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அமேயா கோப்கர் மராத்தியில் கபிலுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அதில், "பாம்பே அதிகாரப்பூர்வமாக மும்பை எனப் பெயர் மாற்றப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும், பாலிவுட்டின் கபில் சர்மா ஷோ, பிரபல விருந்தினர்கள், டெல்லியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் பல இந்திப் படங்களில் 'பாம்பே' என்ற வார்த்தை இன்னும் பயன்படுத்தப்படுகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.

எச்சரிக்கை: மும்பையின் பெயர் மாற்றம் 1995-ல் மகாராஷ்டிரா அரசாலும், 1996-ல் மத்திய அரசாலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தனது பதிவில் கபில் சர்மா மற்றும் நெட்ஃபிக்ஸ் இருவரையும் அவர் டேக் செய்திருந்தார். இந்த விவகாரம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கோப்கர், "நீங்கள் (கபில் சர்மா) இத்தனை வருடங்களாக மும்பையில் பணிபுரிந்து வருகிறீர்கள்... மும்பை உங்கள் 'கர்மபூமி' (பணிபுரியும் இடம்). மும்பை மக்கள் உங்களை விரும்பி உங்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். மும்பை எங்கள் இதயத்தில் உள்ளது, இந்த நகரத்தை அவமதிக்காதீர்கள், மும்பை மக்களை அவமதிக்காதீர்கள்... நான் கபில் சர்மாவை எச்சரிக்கிறேன்," என்று லைவ் மின்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பைனு சொல்லுங்க: இந்த தவறு எதிர்பாராத விதமாக நடந்திருந்தால், அதைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோப்கர் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "இது தவறுதலாக நடந்திருந்தால், தவறை சரிசெய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் அல்லது தொகுப்பாளர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மும்பையை பாம்பே அல்லது பம்பாய் என்று அழைக்கக்கூடாது. அவர்கள் மும்பை என்றுதான் சொல்ல வேண்டும் என்று முதலில் சொல்லுங்கள்," என்றார்.

Kapil Sharma In Trouble MNS Warns Comedian After He Calls Mumbai Bombay on The Great Indian Kapil Show 3 Netflix
Photo Credit:

சிவகார்த்திகேயன் நிலைமை: இந்த எச்சரிக்கையை மீறினால், MNS கட்சியினர் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' 2024-ல் நெட்ஃபிக்ஸில் தொடங்கப்பட்டது. இது தலா 13 எபிசோட்களுடன் இரண்டு சீசன்களை முடித்துள்ளது. கபில் சர்மாவைத் தவிர, அர்ச்சனா பூரன் சிங், சுனில் குரோவர், கிகு ஷர்தா போன்றோர் இந்த நிகழ்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சி பிரபல விருந்தினர்களுடன் இலகுவான உரையாடல்களை மையமாகக் கொண்டது. இந்த சர்ச்சை குறித்து தெரிந்து கொண்ட நம்மூர் இணையவாசிகள் தெரிந்து கொண்டு, நல்லவேளை நம்மூரில் இப்படி ஒரு அரசியல்வாதி இல்லை. இருந்திருந்தால் மதராஸி படம் எடுத்த ஏ.ஆர். முருகதாஸ் , படத்தில் நடித்த சிவகார்த்திகேயனின் நிலைமை என்னவாக ஆகியிருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X