இளைஞர்களின் நாடித்துடிப்பை எகிறவைக்கும் படைப்பாளி... படைப்புகளின் சிறப்பு வீடியோ வெளியீடு

சென்னை : கபிலன் வைரமுத்து திரைத்துறையிலும் இலக்கிய உலகிலும் தன்னை சிறப்பான எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

கவிதை, சிறுகதை, நாவல், திரைக்கதை எழுத்து என பல்வேறு தளத்திலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி இளைஞர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்து வருகிறார்.

இந்நிலையில் அவரது படைப்புகளின் சிறப்பு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து சிறப்பான எழுத்தாளராகவும் பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக வலம் வருகிறார். இவர் திரைத்துறையில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து கவிதை சிறுகதை, நாவல் என பன்முகத் திறமையை காட்டி வருகிறார்.

வைரமுத்துவின் இளைய மகன்

வைரமுத்துவின் இளைய மகன்

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான இவர், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை தனது பன்முக திறமை மூலம் நிரூபித்து வருகிறார். உலகம் யாவையும், கடவுளோடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட கவிதை தொகுப்புக்களையும் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பையும் இவர் எழுதியுள்ளார்.

கபிலனின் நாவல்கள்

கபிலனின் நாவல்கள்

மேலும் பூமரேங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி உள்ளிட்ட நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். இதில் பூமரேங் பூமி ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. மெய்நிகரி சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்கப்பட்டது. இந்த நாவலை தழுவி தமிழில் கவண் படம் எடுக்கப்பட்டது.

திரைப்படங்களில் வசனம்

திரைப்படங்களில் வசனம்

இதில் வசனங்களை இவரே எழுதியுள்ளார். மேலும் விவேகம் படத்திலும் இவர் வசனங்களை எழுதியுள்ளார். பல படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது அம்பறாத்தூணி சிறுகதை தொகுப்பும் சிறப்பான கவனத்தை பெற்றது. பல்வேறு நேரங்களில் நடைபெற்ற சிறப்பான சம்பவங்களின் தொகுப்பாக நீண்ட கள ஆய்விற்கு பின்பு இந்த கதைகள் எழுதப்பட்டுள்ளன.

படைப்புகளின் கையேடு

படைப்புகளின் கையேடு

தன்னுடைய பள்ளி நாட்கள் துவங்கி இன்றுவரை தமிழ் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வரும் கபிலனின் படைப்புகளின் கையேடு தற்போது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவரது படைப்புகளின் பட்டியல் மட்டுமின்றி அவரது அழகான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

கமல் படத்திலும் வசனம்

கமல் படத்திலும் வசனம்

இவர் இந்தியன் 2 படத்திலும் ஜெயமோகன், லட்சுமி சரவணகுமாருடன் இணைந்து வசனங்களை எழுதவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X