கொடைக்கானல் மலையில் குந்திக் கொண்டு கபிலன் எழுதிய "ஐ" பாட்டு!

By Sudha

இயக்குநர் ஷங்கர் படத்தின் பாடல் காட்சிகள் தனித்துவத்தோடு இருக்கும். கதாநாயகியின் கம்மல் கூட தனி கவிதை பாடும். ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்வார் ஷங்கர். அதேபோல அவரது ஐ படத்திலும் கவிஞர் கபிலன் 3 அழகான பாடல்களை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு பாடலையும் எழுதிய விதத்தை கபிலன் விவரிக்கும் போதே அந்த பாடல் காட்சியின் பிரம்மாண்டத்தை உணர்த்தியுள்ளார். விமானப் பயணத்தின் போது எழுதிய பாடல், கொடைக்கானல் மலை உச்சியில் அமர்ந்து எழுதிய பாடல் என ஐ படத்தின் பாடல் பற்றி தனி எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளார் கபிலன்.

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் "ஐ". இதில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

கொடைக்கானல் மலையில்

கொடைக்கானல் மலையில்

"ஐ" படத்திற்கான பாடல் எழுதிய அனுபவத்தைப் பற்றி கூறியுள்ள கபிலன், இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து எழுதியுள்ளேன்.

ஷங்கருடன் நான்

ஷங்கருடன் நான்

ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம் பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார்.

நாயகன், நாயகி

நாயகன், நாயகி

அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்படவிருக்கிறது என்பதை அந்தந்த லொக்கேஷன்களை இன்டர்நெட்டில் காட்டி விளக்குவார். குறிப்பிட்ட அந்த பாடல் காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் எந்த விதமான உடைகள் அணிவார்கள் என்பதை கூட அந்த உடைகளின் புகைப்படங்களை காட்டி பிரமிக்க வைப்பார்.

புயல் இசை

புயல் இசை

பாடல் எழுதும் முன்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூனை ஒலிக்க செய்வார். இப்படியெல்லாம் அந்த பாடல் எழுதுவதற்கான உற்சாகமான மன நிலையை எனக்குள் உருவாக்கிவிடுவார்.

பாடல் வரிகள்

பாடல் வரிகள்

அதன்பிறகு அந்த பாடல் வரிகளில் எவையெல்லாம் வர வேண்டும் என்பதையும் சுருக்கமாக கூறிவிடுவார். பின்னர் நமது கற்பனை குதிரையை தட்டிவிட வேண்டியதுதான்.

உயர்ந்த இடத்தில்

உயர்ந்த இடத்தில்

ஒரு பாடலை எழுதுவதற்காக நாங்கள் கொடைக்கானலுக்கு கிளம்பினோம். அந்த பாடலை மிக உயர்ந்த இடத்தில் வைத்துதான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் ஷங்கர்.

விமானத்தில் பிறந்த பாடல்

விமானத்தில் பிறந்த பாடல்

இதற்காக விமானத்தில் மதுரை செல்வதற்குள்ளாகவே விறுவிறுவென பாடலை எழுத ஆரம்பித்து விட்டோம். இறங்குவதற்குள் சில பல்லவிகள் தயாராகிவிட்டன. பின்பு அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்று மலை உச்சியில் தங்கினோம்.

உயர்வான பாடல்

உயர்வான பாடல்

"உயர்வான பாடல் இது. எனவே உச்சியில் அமர்ந்துதான் எழுத வேண்டும்" என்று ஷங்கர் சார் சிரித்துக் கொண்டே கூறினார். அந்த பாடல் வரிகள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்பு பிரமாதமான பாடலாக உருமாறி வந்தது.

உறங்காத இரவுகள்

உறங்காத இரவுகள்

இந்த பாடல்களை எழுதி முடிக்கும் வரை நான் இரவில் எந்த நேரமும் தயாராக விழித்துக் கொண்டிருப்பேன். திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் சார் போன் செய்வார். சில வார்த்தைகளை சொல்லி மாற்றச் சொல்வார்.

அனிருத் பாடிய பாடல்

அனிருத் பாடிய பாடல்

"ஐ" படத்திற்காக நான் எழுதிய இன்னொரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார் என்றார் கபிலன்.

கபிலன் சொல்லச் சொல்ல கபாலத்திற்குள் நமக்கு கற்பனைகள் விரிகிறதே....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X