Kara Day 5 Box Office - தனுஷின் கர 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை மோசம்

சென்னை: தனுஷ் - விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கர. அந்தப் படம் கடந்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த அந்தப் படம் பெரிய வரவேற்பை எதுவும் பெறவில்லை. விமர்சன ரீதியாக அடி வாங்கிய அந்தப் படம் வசூலிலும் பெரிய டல்லடித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான எந்தப் படமும் சரியாக போகவில்லை. அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைத்தும் ஏகப்பட்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவர் கமிட்டான கர திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதில் அவருடம் மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஏப்ரல் 30ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.

Kara Box Office Day 5 Dhanush s Strong Performance Can t Save Film
Photo Credit:

எப்படி இருக்கிறது படம்?: ஏற்கனவே போர்த்தொழில் படத்தை இயக்கி நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார் விக்னேஷ். அதன் காரணமாகவும்; அவரும், தனுஷும் முதன்முதலாக சேர்ந்திருந்ததாலும்; நிச்சயம் படம் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் படம் பார்க்க சென்றார்கள். கதைக்களம் ஓகேயாக இருந்தாலும் அதை இயக்குநர் உருவாக்கிய விதமும், ப்ரெசன்ட் செய்த விதமும் அந்நியமாக இருந்ததால் படத்தை பெரும்பாலான ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி.. மாரி செல்வராஜ் எவ்வளவு வருத்தப்படுறாரு பாருங்க
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி.. மாரி செல்வராஜ் எவ்வளவு வருத்தப்படுறாரு பாருங்க

தனுஷ் நடிப்பு எப்படி?: அதேசமயம் இதிலும் தனுஷ் வழக்கம்போல் நடிப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எமோஷனல், ஆக்ஷன் என அத்தனையிலும் அவர் தேர்ந்த நடிகராக பல படிகள் முன்னே இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது இந்த அபார நடிப்பை பார்த்த ரசிகர்களோ, ஒவ்வொரு படத்திலும் தனுஷின் நடிப்பு அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் அந்தப் படம் எதுவும் ஹிட்டாகாமல் அவரது உழைப்பை வீணாக்குகின்றனவே என்று நொந்துகொள்கிறார்கள்.

வசூல் நிலவரம்: ஆகமொத்தம் கர தனுஷ் கரியரில் பெரிய கறையை உண்டு செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விமர்சன ரீதியாகத்தான் அப்படி அடி வாங்கியது என்றால் வசூலிலும் பெரிய இம்பேக்ட்டை படம் க்ரியேட் செய்யவில்லை. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் இரண்டு நாட்களில் தலா ஆறு கோடி ரூபாயை வசூலித்த அந்தப் படம் அடுத்தடுத்த நாட்களில் குறைவதும் ஏறுவதுமாக இருந்தது. நேற்று ஐந்தாவது நாளில் படத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக படுத்துவிட்டது. அந்தப் படம் நேற்று 1.80 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறதாகவும்; மொத்தம் ஐந்து நாட்களில் 50 கோடியை படம் தொடவில்லை என அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.

Read more about: kara கர தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X