Kara Box Office Day 1: கர முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியதா? இல்லை படுத்துடுச்சா?

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து, விக்னேஷ் ராஜா இயக்கி உருவான படம் கர. படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், படத்தின் திரைக்கதை ஸ்லோ என்றாலும் சில அதிரடித் திருப்பங்களுடன் படம் நன்றாக உள்ளது என பரவலாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் ரசிகர்கள் பலரும் படத்தின் நுணுக்கமான காட்சிகள் அனைத்தையும் பாராட்டி வருகின்றனர் இப்படி இருக்கையில் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூபாய். 9.14 கோடிகள் வசூலித்திருக்கும் என்று சாக்நிக் வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

Kara opens strong at the box office earning 9 14 crore worldwide on day one as Dhanush s performance and gripping real-life inspired story draw positive response from audiences globally

படம் பார்த்த ரசிகர்கள் பலரும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர், குறிப்பாக கே.எஸ். ரவிக்குமார் மற்றும் தனுஷ் இணைந்து வரும் காட்சிகள் நன்றாக உள்ளது. படத்தின் இடைவேளை காட்சி யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு செம்ம டிவிஸ்ட்டாக உள்ளது. அதேபோல் இடைவேளை காட்சிக்குப் பிறகு கதை நகரும் விதமே மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.

தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ள மமிதா பைஜு சரியான தேர்வா என்று ரிலீஸ்க்கு முன்னர் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் ஒவ்வொன்றிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X