Dhanush salary: 'கர' பட நடிகர்களின் சம்பளம்.. தனுஷூக்கு மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. இந்த படத்திற்கு முதலில் கரசாமி என தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், சில பிரச்சனையால் படத்தின் பெயர் 'கர' என மாற்றப்பட்டது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

தனுஷின் சம்பளம்: வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக இசரி கணேஷ் தயாரித்து இருக்கும் 'கர' திரைப்படம் ரூ100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் ரூ58 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் ரூ15 முதல் 20 கோடி வரை சம்பளம் பெற்று வந்த தனுஷ் 'கர' படத்தில் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார். அதேபோல தமிழ் சினிமாவின் பேவரைட் நடிகையாக மாறி இருக்கும் மமிதா பைஜூக்கு ரூ. 2 கோடியும், சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு ரூ.2 கோடியும், ஜெயராமுக்கு ரூ.1 கோடியும், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷூக்கு ரூ 4 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dhanush kara Salary
Photo Credit:

காத்துவாங்கும் தியேட்டர்: படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் படத்தின் வசூல் நன்றாக இருந்த போது மே 1ந் தேதி விடுமுறை தினமான நேற்று படத்தின் வசூல் 10 சதவீதம் குறைந்துவிட்டது. அதோடு மட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 'கர' படத்திற்கு பெரிய அளவில் புக்கில் எதுவும் இல்லாததால், பல தியேட்டர்களில் 'கர' திரைப்படம் காத்து வாங்கி வருகிறது. போட்டிக்கு எந்த படமும் இல்லாமல் சோலோவாக வெளியான இந்த படத்திற்கு இந்த நிலைமையான என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதற்கு காரணம் பல முறை பார்த்து பழகிப்போன கதை என படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்தார். ஆனால், பயில்வான் ரங்கநாதன் இந்த படத்தில் தனுஷ் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்திற்காக தனுஷ் நிச்சயம் தேசிய விருதை பெறுவார் என வெகுவாக பாராட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X