Kara Box Office Day 3 : 3ம் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன ‘கர‘.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

சென்னை: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, சூரஜ், எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் 'கர' திரைப்படம் ஏப்ரல் 30ந் தேதி தியேட்டரில் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இட்லிக்கடை படத்திற்கு பின் தனுஷ் நடித்து இருக்கும் படம் கர. இந்த படத்தில் கரசாமி என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திருடனாக இருக்கும் தனுஷ் மற்றும் பாண்டியராஜின் மகனான பிரித்வி இருவரும் சேர்ந்து எம்.எல்.ஏ வீட்டில் திருடும்போது மாட்டிக்கொள்கிறான். இதில் பிரித்வி தப்பித்துவிட தனுஷ் மட்டும் மாட்டிக்கொள்கிறார். டி.எஸ்.பி சூரஜ் வெஞ்சரமூடு இந்த வழக்க விசாரித்துக் கொண்டு இருக்கும் போது தனுஷ் தப்பித்து விடுகிறான். அதன் பின் திருந்தி வாழ முடிவு எடுக்கும் தனுஷ் ஹோட்டலில் வேலை பார்க்கிறான். பின் சொந்தமாக மெஸ் தொடங்க வங்கியில் லோன் கேட்க, நிலப் பத்திரம் கேட்கிறார்கள்.

Dhanush kara box office
Photo Credit:

'கர' படத்தின் கதை: அப்பாவின் நில பத்திரத்தைவைத்து ஓட்டலை தொடங்க திட்டமிடும் தனுஷ், மீண்டும் சொந்த ஊருக்கு வந்து அப்பா கே.எஸ்.ரவிக்குமாரிடம் நிலபத்திரத்தை கேட்கிறார். ஆனால், ஏற்கனவே அந்தப் பத்திரத்தை வைத்து டிராக்டர் லோன் வாங்கியிருப்பது தெரிய வருகறிது. ஆனால், அவரால் லோன் கட்டமுடியாமல் போக வங்கி நிலத்தை ஜப்தி செய்கிறது. இந்த அதிர்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமார் இறந்துவிடுகிறார். கடனை அடைத்தால் மட்டுமே நிலம் திரும்பக் கிடைக்கும் என்ற நிலையில் தனுஷ் என்ன செய்தார் என்பது தான் கர சாமி படத்தின் கதை.

3ம் நாள் வசூல்: ஏப்ரல் 30ந் தேதி தியேட்டரில் வெளியான 'கர' திரைப்படம் முதல் நாளில் ரூ.6.20 கோடி வசூலை அள்ளியது. இரண்டாம் நாள் ரூ.6.95 கோடியாக படத்தில் வசூல் அதிகரித்தது. நேற்று சனிக்கிழமை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.5.20 கோடியாக வசூலித்துள்ளது. படம் முதல் நாளை விட குறைவான வசூலை பெற்றுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் கர படத்தின் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X