Kara Box Office Day 3: ‘படுத்தே விட்டானய்யா‘.. கர பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் இவ்ளோ கம்மியா? பாவம் தனுஷ்!
சென்னை: தனுஷின் அட்டகாசமான நடிப்பில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்த 'கர' திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த பலரும் கலவையான விமர்சனத்தை கொடுத்து வரும் நிலையில், படத்தின் நான்காவது நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு 'இட்லிக்கடை' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்தும் இருந்தார். அந்த படத்தில் அப்பா-மகன் சென்டிமென்ட் அதிகமாக பேசப்பட்டது. இட்லிக்கடை படத்தைத் தொடர்ந்து தற்போது 'கர' திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் அப்பா மகனின் உறவு முக்கியமாக இடம்பெற்றுள்ளது. இட்லிக்கடை படத்தில் ராஜ்கிரண் தனுஷின் அப்பாவாக நடித்திருந்த நிலையில், 'கர' படத்தில் கே.எஸ். ரவிக்குமார் அந்த வேடத்தில் நடித்துள்ளார்.
தனுஷின் கர: 'கர' படத்தின் முதல் காட்சியை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். ஆனால் சிலர், படத்தை இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம். இது இட்லிக்கடை படத்தைப் போலவே இருக்கிறது. படத்திற்கு 'கர' என பெயர் வைப்பதற்குப் பதிலாக 'இட்லிக்கடை 2' என்றே பெயர் வைத்திருக்கலாம் என்று நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட்டனர்.

4ம் நாள் வசூல்: இவ்வாறு கர படம் கலவையான விமர்சனங்களை பெற்று முதல் நாளில் ரூ. 6.20 கோடி வசூலித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ரூ. 6.95 கோடியாக வசூல் சற்று உயர்ந்தது. ஆனால், வார இறுதி நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், சனிக்கிழமை ரூ. 5.20 கோடி மட்டுமே வசூலித்து சுமார் 25% சரிவை கண்டது. ஞாயிற்றுக்கிழமையும் படம் ரூ. 5 கோடி மட்டுமே வசூலித்தது. இதன் மூலம் 'கர' திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ. 23 கோடியை வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 100 கோடி என கூறப்படுகிறது. இதில் தனுஷுக்கு மட்டும் ரூ. 58 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய வசூல் நிலவரத்தைப் பார்க்கும்போது தயாரிப்பாளருக்கு இத்திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications