காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்.. ‘கருப்பு’ ஸ்டாப்.. ‘கர’ படத்துக்கு கூட்டம்!
சென்னை: ஏப்ரல் 30ம் தேதி ரிலீஸ் ஆன தனுஷின் கர படத்தை முதல் நாளில் ஆவலாக சென்று பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் இயக்குநர் விக்னேஷ் ராஜா என சோஷியல் மீடியாவில் அவரை வச்சு பங்கமாக கலாய்த்து விட்டனர்.
அதன் பிறகு கர படத்தின் பாக்ஸ் ஆபீஸ் போஸ்டரை கூட படக்குழு வெளியிட முடியாமல் அமைதி காத்து வந்த நிலையில், 14 நாட்கள் கழித்து தற்போது கர படத்துக்கு ரசிகர்கள் டிக்கெட் எடுத்து பார்த்து வருவதாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்த கர திரைப்படம் கிராமத்தில் ஒரு ஹாலிவுட் லெவல் படம் என வழக்கம் போல தனுஷ் படம் வெளியாவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட பில்டப் படம் வெளியான பின்னர், புஸ் ஆகிப்போனது.
கருப்பு ரிலீஸ் சிக்கல்: முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் கருப்பு படத்துக்கு 9 மணிக்கான சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தயாரிப்பு தரப்புக்கும் பைனான்ஸியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் இன்னமும் வெளியாகவில்லை. இன்று மாலை 6 மணிக்காவது படம் வெளியாகுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.
கர படத்துக்கு டிக்கெட் கொடுங்க: ஆன்லைனில் ட்விட்டரை பார்க்கும் ரசிகர்களுக்கு நள்ளிரவில் எஸ்.ஆர். பிரபு போட்ட ட்வீட் தென்பட்டிருக்கும். ஆனால், காலையிலேயே தியேட்டருக்குச் சென்று கொண்டாட நினைத்த ஆஃப் லைன் ரசிகர்களின் நிலை அதோகதியாகி விட்டது. பல ரசிகர்கள் போராட்டம் செய்யும் அளவுக்கு சென்று விட்டனர். சோஷியல் மீடியா முழுவதும் தயாரிப்பாளரை கெட்ட வார்த்தையால் சூர்யா ரசிகர்களே திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு படி மேலே சென்று கருப்பு படம் வெளியாகும் என நம்பி தியேட்டருக்கு பல கிலோ மீட்டர் டிராவல் செய்து சென்றவர்கள் 11.30 மணிக்கு மேல் தனுஷின் கர படத்துக்கு டிக்கெட் எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டதாக பதிவுகள் பரவி வருகின்றன.
குவியும் ட்ரோல்கள்: கருப்பு படம் வரலைன்னா கம்முன்னு வீட்டுக்குப் போய் ஓடிடியில் ஏதாவது ஒரு படத்தை பாருங்க. தயவு செய்து அந்த பக்கம் போயிடாதீங்க சாமி என்றும் தெரியாத்தனமா கர படத்துக்கு போய் மாட்டிக்கிட்டேனே ஏய் கருப்பா இதென்ன கொடுமை என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications