Kara Twitter Review: கர டிவிட்டர் விமர்சனம்.. படத்துல சம்பவம் இல்ல.. சம்பவத்துலதான் படமே!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கர. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகர்கள் பிரித்வி பாண்டியராஜ், கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ரசிகர் ஒருவர், " படத்தின் முதல் பாதி மிகவும் நிதானமாகவும் ஆழமான திரைக்கதை நகர்வுடனும் இருக்கிறது. திருடுவது தொடர்பான காட்சி தியேட்டரை மொத்தமாகவே டென்ஷன் ஆக்கிவிட்டது. தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு மொத்தமாக உயிர் கொடுத்துள்ளார். மமிதா பைஜு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கருணாஸ் வரும் காட்சிகள் இயல்பாகவே நகைச்சுவை கூடி விடுகிறது. ஜி.வி. பிரகாஷ் இசை படத்தின் கதையோடு நம்மை நன்றாக ஒன்றச் செய்கிறது. முதல் பாதி முடியும் காட்சி தரம். இரண்டாம் பாதியில் காவல்துறை திருடனைத் துரத்தும் காட்சிகள் அனல் பறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

பாடல்கள் & பின்னணி இசை: மற்றொருவரோ படம் தரமாக இருக்கு. முதல் பாதி அருமையோ அருமை. பாடல்களை சரியான இடத்தில் பொருத்தி உள்ளார் இயக்குநர். பின்னணி இசை மூலம் படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார் என அனைவரும் உலகத்தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
சிறந்த படம்: மற்றொருவரோ, படத்தின் முதல் பாதியில் நாம் எதிர்பார்த்த திரைக்கதை ஒன்று, ஆனால் நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் பல உள்ளன. தனுஷ் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் என இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. முதல் பாதியில் படம் முழுக்க திருப்பங்கள் இருந்தாலும், இடைவேளை காட்சி அவை அனைத்தையும் ஓவர் டேக் செய்து விடுகிறது. இரண்டாம் பாதியில் காவல் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் தனுஷ் சேஸிங் காட்சிகள் தான். இந்த ஆண்டில் வெளியான தரமான டாப் 3 படங்களில் ஒன்றாக கர படத்தைக் கூறலாம் என பதிவிட்டுள்ளார்.
திரைக்கதை: கர படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முதல் பாதியில் படம் ஸ்லோவாகச் சென்றாலும் அதை மிகவும் அழகாக கையாண்டுள்ளார் இயக்குநர், அது சலிப்பு தட்டாமல், திரைக்கதையில் வைத்த திருப்பங்கள் மெதுவான திரைக்கதையின் தாக்கத்தை அதிகம் வெளிக்காட்டவில்லை என பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications