கரையோரம்.. தமிழ், கன்னடத்தில் உருவாகும் காதல் த்ரில்லர்!
கரையோரம் என்ற பெயரில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் உருவாகிறது. ஜேகேஎஸ் இயக்கும் இந்தப் படம் த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் தொடக்கவிழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

தமிழில் தலைவன், என்னமோ ஏதோ ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பல படங்களும் நடித்த நடிகை நிகிஷா பட்டேல் நாயகியாக நடிக்கிறார்.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் இரண்டு இளம் காதல் ஜோடிகள் ஒரு பீச் பங்களாவில் தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள்தான் கதை என்கிறார் இயக்குநர் ஜேகேஎஸ்.

இனியா இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார். சுஜித் ஷெட்டி இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜெய் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
கணேஷ் பிரசாத், வஷிஷ்டா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் மொத்தம் எட்டு பேர் மட்டுமே நடிக்கவுள்ளனர்.
காமெடிக்காக சிங்கம் புலி மற்றும் எம்.எஸ்.பாஸ்கரைச் சேர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











