சினிமா ஆசையில் ஹோட்டலில் வேலை செய்த குள்ளமணி..500 படங்களில் நடித்தும்.. அனாதையா இறந்த அவலம்!
சென்னை: சினிமா என்பது ஒரு மாயவலை அந்த மாயவலையில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்த இடமே தெரியாமல் பல நடிகர்கள் காணாமல் போய் உள்ளனர்.
அப்படி 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த குள்ளமணி கடைசி காலத்தில் யாருமே இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பல படங்களில் நடித்துள்ள இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். நடிகர் குள்ளமணியின் சோக கதையை இப்போது பார்க்கலாம்.
நடிகர் குள்ளமணி: ராமராஜன் நடித்த கரகாட்டாக்காரன் படத்தில் பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம் என்ற நகைச்சுவை மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்திற்கு முன்பே இவர், நவாப் நாற்காலி, வசந்தத்தில் ஓர் நாள், பொய் சாட்சி, இன்று போய் நாளை வா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், கரகாட்டக்காரன் திரைப்படம் தான் இவரை புகழடையச் செய்தது.
முன்னணி நடிகர்களுடன்: ரஜினி, கமல், ராமராஜன், செந்தில், கவுண்டமணி, சத்யராஜ், உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து குள்ளமணி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு பாய்ஸ் நாடக குழுவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
ஓட்டலில் டேபிள் துடைத்தார்: சென்னை வந்தால் பெரிய வேடத்தில் நடிக்கலாம் என்ற ஆசையில் சென்னை வந்த இவர், பல ஸ்டூடியோக்களில் வாய்ப்புகள் கேட்டு அலைந்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கையில் இருந்து காசு காலியாகிப்போனதால், ஓட்டல் ஒன்றில் டேபிளை துடைத்து பிழைப்பு நடத்தி உள்ளார். அவரின் கடுமையான உழைப்பால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
500க்கும் மேற்பட்ட படங்கள்: பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த குள்ளமணிக்கு 2013 ம் ஆண்டு கிட்னி பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த போதும், அவருக்கு நடிகர் சரத்குமாரை தவிர வேறுயாரும் உதவி செய்யவில்லை. இவருடைய மறைவுக்கு பின் கூட பிரபலங்கள் யாரும் எட்டி பார்க்கவில்லை என்பது தான் வேதனை.


Click it and Unblock the Notifications











