»   »  என்னாது 'கே'ன்னு கிசுகிசுக்கப்பட்ட கரண் ஜோஹார் ஏக்தா கபூரை காதலிக்கிறாரா?

என்னாது 'கே'ன்னு கிசுகிசுக்கப்பட்ட கரண் ஜோஹார் ஏக்தா கபூரை காதலிக்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் ஏக்தா கபூரை காதலிப்பதாக பேச்சாக கிடக்கிறது.

43 வயதாகியும் திருமணம் செய்யாமல் ஜாலியாக வலம் வருபவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார். ஷாருக்கானின் நெருங்கிய நண்பரான கரண் கோஹாரும் இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் ஏக்தா கபூரும் காதலிப்பதாக பாலிவுட்டில் பல காலம் கிசுகிசுக்கிறார்கள்.

ஏக்தா கபூர் டர்ட்டி பிக்சர் படத்தை தயாரித்தவர், தற்போது XXX என்ற மிகவும் கவர்ச்சியான படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்

காதல்

40 வயதாகும் ஏக்தாவும், 43 வயதாகும் கரணும் கிசுகிசு பற்றி கருத்து தெரிவிக்காத போதிலும் அதை மறுக்கவும் இல்லை. இந்நிலையில் கரண் ஏக்தாவின் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்தி போட்ட ட்வீட் அவர்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளது.

ட்வீட்

கரண் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, நான் காதலிக்கும் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!நாங்கள் ஆத்ம துணைகளாவோம்!!! என்று தெரிவித்துள்ளார்.

காதலா?

காதலா?

அந்த ட்வீட்டை வைத்து கரண் ஏக்தாவை காதலிப்பதை ஒப்புக் கொண்டதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் தற்போது தான் நாளைக்கு வெள்ளிக்கிழமை என்பது போன்று ஆளாளுக்கு ஐ லவ் யூ சொல்வதை சகஜமாக்கிவிட்டார்களே. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் அர்த்தம் இல்லாமல் ஐ லவ் யூ கூறி வரும் பழக்கம் அதிகரித்துள்ளதே.

கே

கே

கரண் ஏக்தா கபூரை காதலிக்கும் செய்தி ஒரு புறம் உள்ளது. கரண் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பாலிவுட்டில் காதும், காதும் வைத்தது போன்று பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After seeing Bollywood director Karan Johar's tweet wishing producer Ekta Kapoor, hindi film industry thinks they are definitely in love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil