மரணத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.. உங்களுடன் ஓராண்டாய் தொடர்பில் இல்லை.. பிரபல இயக்குநர் உருக்கம்
சென்னை: நடிகர் சுஷாந்தின் மரணம் குறித்து பிரபல இயக்குநரான கரன் ஜோஹர் உருக்கமாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
Recommended Video
நடிகர் சுஷாந் சிங் ராஜ்புத் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணம் குறித்து பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது மன அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங்கிற்கு இந்த லாக்டவுன் மேலும் அழுத்தத்தை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

தொடர்பில் இல்லை
இந்நிலையில் இந்தி சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான கரன் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக உங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு என்னை நானே குற்றம்சாட்டுகிறேன்.

ஆனால் பின்பற்றவில்லை
உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள எங்களைப் போன்றவர்கள் தேவைப்பட்டிருக்கலாம் என்று நான் உணர்ந்தேன்... ஆனால் எப்படியோ நான் அந்த உணர்வைப் பின்பற்றாமல் போய்விட்டேன்... இனி மீண்டும் ஒருபோதும் அந்த தவறை செய்ய மாட்டேன்... நாங்கள் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் சத்தமில்லாத ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில்தான் இன்னும் வாழ்கிறோம்...

ஒரு பெரிய அலாரம்
நம்மில் சிலர் இந்த அமைதிக்கு அடிபணிந்து உள்ளே செல்கிறோம்... நாம் உறவுகளை தொடங்குவது மட்டுமல்ல, தொடர்ந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்... சுஷாந்தின் துரதிர்ஷ்டவசமான மறைவு எனக்கு ஒரு பெரிய அலாரம்... என் இரக்கத்தின் நிலை மற்றும் எனது சமன்பாடுகளை பாதுகாப்பதற்கும் எனது திறன்களை வளர்ப்பதற்கும்...

மிஸ் பண்ணுவேன்
இது உங்கள் அனைவருக்கும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.. உங்கள் தொற்று புன்னகையையும் கரடி போன்ற கட்டிபிடிப்பையும் இழப்பேன்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனிடையே கரன் ஜோஹர் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. சுஷாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ட்ரைவ் திரைப்படத்தை கரன் ஜோஹர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











