நயன்தாராவை அசிங்கப்படுத்திய இயக்குநர்..திட்டிதீர்க்கும் ரசிகர்கள்!
மும்பை : காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கரண் ஜோகர் நயன்தாராவை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அவரது ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் நடத்தி வரும் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
அந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் அனைருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றுவார்கள். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் பங்கேற்றனர்.

சமந்தா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, தன்னுடைய திருமண வாழ்வு குறித்தும் மனம் திறந்து பேசினார். மேலும், நாக சைதயாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைதான் நடக்கும். அதனால் எங்கள் திருமண வாழ்வு அவ்வளவு இணக்கமாக அமையவில்லை இது தான் நாங்கள் இருவரும் பிரிவதற்கு காரணம் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

டாப் நடிகை நயன்தாராதா
இந்த நிகழ்ச்சி வரஇறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், தென்னிந்தியாவின் டாப் பெண் நடிகை யார் என்று சமந்தாவிடம் கரண் கேட்டார். அப்போது, சமந்தா, நயன்தாராவுடன் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அவர்களது, நடிப்பையும், அர்ப்பணிப்பையும் பார்க்கும் போது தென்னிந்தியாவின் முதல் டாப் நடிகை நயன்தாரா தான் என்றார்.

கடுப்பான ரசிகர்கள்
உடனே குறுக்கிட்ட கரண், நீங்கள் சொல்வது சரி தான். ஆனால், காஃபி வித் கரண் நிறுவனம் நடத்திய பட்டியலில் நயன்தாரா பெயரே இல்லை என்று கூறியுள்ளார். இந்த பதிலால் கடுப்பான நயன்தாரா ரசிகர்கள், நயன்தாராவை கரண் ஜோகர் அசிங்கப்படுத்தி விட்டார் என்று அவரை இணையத்தில் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

திறமையான நடிகைகள் இருக்கிறார்கள்
மேலும், நயன்தாராவின் தீவிர ரசிகர் ஒருவர், கரண் சார், உங்களின் குட் லக் ஜெர்ரியின் ரீமேக் நயன்தாராவின் படத்தின் ரீமேக் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, அசின், த்ரிஷா என இன்னும் திறமையான நடிகர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Recommended Video

ஜவான்
நயன்தாரா தற்போது அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் ஜோடி சேர்த்து நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அட்டமாசமான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











