twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்!

    By
    |

    மும்பை: போதைப் பொருள்களை பயன்படுத்தியது இல்லை என்று பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

    சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து பாலிவுட் பரபரப்பாகி இருக்கிறது.

    பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை, சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியாவிடம் விசாரணை நடத்தியது.

    புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்! புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்!

    வாட்ஸ்அப் உரையாடல்

    வாட்ஸ்அப் உரையாடல்

    அப்போது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நடிகை ரியா, அவர் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சாமுவேல் மிரண்டா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ரகுல் பிரீத் சிங்கிடம் போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்றுமுன் தினம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

    கரண் ஜோஹர்

    கரண் ஜோஹர்

    இந்நிலையில், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது முதல் நெபோடிசம் பற்றி பேச்சு எழுந்தது. அதில் கரண் ஜோஹரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வருடம் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மலைக்கா அரோரா

    மலைக்கா அரோரா

    அதில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா உள்பட பல பிரபலங்கள் உள்ளனர். பார்ட்டியில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் போதைப் பொருளை எடுத்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,
    இதற்கு விளக்கமளித்து கரண் ஜோஹர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

    தவறான செய்தி

    தவறான செய்தி

    கடந்த ஆண்டு என் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப் பட்டதாக சில ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வருடமே அதை மறுத்துள்ளேன். இப்போது மீண்டும் அது பரப்பப்படுவதால் மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

    பயன்படுத்துவது இல்லை

    பயன்படுத்துவது இல்லை

    எந்த ஒரு போதை பொருட்களும் அந்த பார்ட்டியில் பயன்படுத்தப்படவில்லை. போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, ஊக்குவிப்பதுமில்லை என்பதை மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன். என்னையும், என் குடும்பத்தையும், என் தயாரிப்பு நிறுவனத்தை களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன.

    நிறுத்திக் கொள்வார்கள்

    நிறுத்திக் கொள்வார்கள்

    கடந்த சில நாட்களாக மீடியா என்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பத் தொடங்கியிருக்கின்றன. மீடியாவில் இருப்பவர்கள் இதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் சட்டத்தை நாட வேண்டியதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

    English summary
    Karan Johar, late on Friday, took to social media to post a long note, denying that any narcotic substance was consumed during a party that he hosted in 2019.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X