காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்ட கரண் ஜோஹர்.. இதயம் நொறுங்கிப் போன டிடி நீலகண்டன்!

மும்பை: காபி வித் கரண் எனும் பிரபல நிகழ்ச்சி இனிமேல் டிவியில் இடம்பெறாது என அதிரடியாக அந்த நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்டுள்ளார் கரண் ஜோஹர். அதற்கு டிடி நீலகண்டன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என பாலிவுட் முழுக்க பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதுவரை வெற்றிகரமாக 6 சீசன்களை நடத்தி முடித்துள்ளார் கரண் ஜோஹர் என்பது குறிப்பிடத்தக்கது.

காபி வித் கரண்

காபி வித் கரண்

விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்க ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சி போல பாலிவுட் பிரபலங்களை வைத்து கரண் ஜோஹர் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதுவரை வெற்றிகரமாக அவர் 6 சீசன்களை நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் அடுத்த சீசனுக்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் போது இப்படியொரு முடிவை அவர் அறிவித்துள்ளார்.

காபி வித் கரண் கிடையாது

காபி வித் கரண் கிடையாது

இன்று திடீரென முக்கிய அறிவிப்பு என ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரண் ஜோஹர் வெளியிட்ட அந்த அறிவிப்பு ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. "காபி வித் கரண் நிகழ்ச்சி என் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. இதுவரை உங்கள் அன்பால் 6 சீசன்களை கடந்துள்ளேன். ஆனால், தற்போது கனத்த இதயத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன், காபி வித் கரண் இனிமேல் வராது என அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

காபி வித் கரண் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கு கரண் ஜோஹர் தயாராகி விட்டார் என நினைத்து இருந்த நேரத்தில் இப்படி தீடிரென ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளாரே, இப்படி அதிரடியாக அறிவிக்கும் அளவுக்கு என்ன பிரச்சனை நேர்ந்தது என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

டிடி நீலண்டன் ட்வீட்

டிடி நீலண்டன் ட்வீட்

உடைந்த இதய எமோஜிகளை உடனடியாக டிடி நீலகண்டன் கரண் ஜோஹரின் ட்வீட்டுக்கு கீழ் பதிவிட்டுள்ளார். மேலும், பல ரசிகர்களும், எப்படியாவது மீண்டும் அந்த நிகழ்ச்சியை கொண்டு வாங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், சிலர் என்ன ஆச்சு சார், எதற்காக இப்படியொரு முடிவு என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நெபோடிசம் சர்ச்சை

நெபோடிசம் சர்ச்சை

தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களையே அறிமுகப்படுத்தி வருகிறார் என்றும், காபி வித் கரண் நிகழ்ச்சி மூலமாக வாரிசு நடிகர்களிடமே பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தார் என்றும், அவர் கேட்கும் கேள்விகளும் வரும் விருந்தினர்கள் கூறும் பதில்களும் அவுட்ஸைடர்களை பாதிக்கும் விதமாகவே இருந்தததாகவும் பெரும் சர்ச்சைகள் கிளம்பி வந்தன. இந்நிலையில், அதன் காரணமாகத்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா? அல்லது தனது கவனத்தை வேறு எதிலாவது முழு நேரமாக செலவிடப் போகிறாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X