தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்!
தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தை பார்த்த பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Recommended Video
மும்பை: வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே, கென் கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அசுரன்.
தென்னிந்தியா முழுவதும் அசுரன் திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோஹர் அசுரன் படம் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

தேசிய விருது
சமூக பிரச்னைகளை சரியான விதத்தில் அசுரன் படம் கையாண்டுள்ளதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் திரையரங்கில் அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டியிருந்தார்.
ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது போலவே நிச்சயம் அசுரன் படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படமாகும் நாவல்கள்
பூமணியின் எழுதிய வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் மூலக் கதையுடன் தனது கருத்து மற்றும் சமூக அக்கறையை சினிமா பாணியில் கோர்த்து வெற்றிமாறன் இயக்கிய விதம் தான் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள்.
இதற்கு முன்னதாக, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படமும் ஆட்டோ சந்திரன் எழுதிய நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை படமும், ஒருவர் எழுதி கொடுத்த 80 பக்க நோட்டு தான் வெற்றிமாறன் வடசென்னை வெளியீட்டுக்கு முன் கூறியிருந்தார்.

கரண்ஜோஹர் பாராட்டு
பாலிவுட்டின் முக்கியமான பிரபலங்களில் ஒருவராக திகழும் கரண் ஜோஹர், தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படத்தை பார்த்து வியப்படைந்துள்ளார். வெற்றிமாறனின் கதை சொல்லும் அழகும், தனுஷின் புயலுக்கு முன் அமைதியான நடிப்புத் திறமையும் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாக பாராட்டியுள்ளார். நிச்சயம் இந்த படத்தை பாருங்கள்.. இது ஒரு சினிமாவின் வெற்றி என்று கொண்டாடியுள்ளார்.
ரசிகர்கள் நன்றி
கரண் ஜோஹரின் இந்த ட்வீட்டை இதுவரை வெற்றிமாறனோ, தனுஷோ பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால், இருவருக்கும் பதிலாக தனுஷ் ரசிகர்கள் கரண் ஜோஹருக்கு தங்களது கமென்ட்டுகளால் நன்றி தெரிவித்து வருகின்றனர். நல்ல படத்தை பாராட்டியதற்கு நன்றி என்றும் பாலிவுட்டில் இந்த படத்தை தயாரிங்க ப்ளீஸ் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











