முதல்முறையாக ஆமீர் கானுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்
மும்பை: குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள ஐஸ்வர்யா ராய் கரண் ஜோஹார் இயக்கத்தில் ஆமீர் கான் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு அவரை தேடி பல வாய்ப்புகள் வந்தபோதிலும் அதை ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் சஞ்சய் குப்தாவின் ஜஸ்பா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஜஸ்பாவில் ஒப்பந்தமான கையோடு மேலும் ஒரு படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹார்
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹார் தனது படத்தில் நடிக்குமாறு ஐஸ்வர்யா ராயை கேட்க அவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

தர்மா புரொடக்ஷன்ஸ்
கரண் ஜோஹாரின் தர்மா புரொடக்ஷன்ஸில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா தற்போது தான் முதல் முறையாக நடிக்க உள்ளார்.

ஆமீர்
கரண் தனது படத்தில் ஹீரோவாக நடிக்க ஆமீர் கானை அணுகினாராம். ஆமீரும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவும், ஆமீர் கானும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











