கைவிரித்து விட்ட மயிலு மகள்.. தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் ‘அந்த’ விஜய்.. நினைப்பது நடக்குமா?

விஜய் தேவரகொண்டாவின் பைட்டர் படத்திற்கு பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகர் ஏற்றிருக்கிறார்.

மும்பை: பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகரை சந்தித்து பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தனக்கென பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தானாக உழைத்து முன்னேறியவர்.

விஜய் தேவரகொண்டா தற்போது 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

அந்த படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்க உள்ள பைட்டர் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் எப்படியாவது பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என விஜய் நினைக்கிறார்.

மறுக்கும் ஹீரோயின்கள்

மறுக்கும் ஹீரோயின்கள்

இதற்காக கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகியோரிடம் பேசப்பட்டது. என்ன காரணத்தினாலோ விஜய்யுடன் நடிக்க ஜான்வி மறுத்துவிட்டார். கியாராவும் தன்னிடம் டேட்ஸ் இல்லை என கூறிவிட்டார். ஆனாலும் பாலிவுட் ஹீரோயின் தான் வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம் விஜய் தேவரகொண்டா.

கரன் ஜோகருடன் சந்திப்பு

கரன் ஜோகருடன் சந்திப்பு

தொடர்ந்து பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டதால், கடைசியாக பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகரிடம் சரண்டராகியிருக்கிறார் விஜய். மும்பையில் அவரை நேரில் சந்தித்த விஜய், பைட்டர் படத்தில் கரன் ஜோகரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு, ஹீரோயின் பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கரன் ஜோகர் வாக்குறுதி

கரன் ஜோகர் வாக்குறுதி

பிஸியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளில் ஒருவரை எப்படியாவது டூயட் பாட அழைத்து வருகிறேன் என கரனும் விஜய்யிடம் வாக்குறுதி அளித்திருக்கிறாராம். இதனால் படுகுஷியாக இருக்கிறார் லிப் கிஸ் நாயகன். இதை கேள்விப்பட்டு டோலிவுட்டே வாயடைத்து போய் இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X