twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரி செல்வராஜ் படத்தை ரீமேக் செய்யும் கரன் ஜோஹர்... வெற்றி பெறுவாரா ?

    |

    மும்பை : பாலிவுட்டின் டாப் டைரக்டர்களில் ஒருவர் கரன் ஜோஹர். இவர் பல இந்தி, மராத்தி, ஆங்கில படங்களை ரீமேக் செய்து வெற்றி கண்டவர். தற்போது முதல் முறையாக தமிழ் படம் ஒன்றை இந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம்.

    எனது வாழ்க்கை புத்தகத்தில் ஜெய் பீம் படம் சிறப்பான அத்தியாயம்... ஷான் ரோல்டன் உற்சாகம்எனது வாழ்க்கை புத்தகத்தில் ஜெய் பீம் படம் சிறப்பான அத்தியாயம்... ஷான் ரோல்டன் உற்சாகம்

    அதுவும் தமிழில் டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், டைரக்டர் பா.ரஞ்சித் தயாரித்து, மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஒன்றை தான் கரன் ரீமேக் செய்ய உள்ளார். தமிழ் சினிமாவில் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் பா.ரஞ்சித்.

    உதயநிதியை இயக்கும் மாரிசெல்வராஜ்

    உதயநிதியை இயக்கும் மாரிசெல்வராஜ்

    தனுஷ் நடித்து பலரால் பாராட்டப்பட்ட கர்ணன் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இரண்டே படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் அழுத்தமான இடத்தை பிடித்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனுஷை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ஒன்றை இயக்க போகிறார். இந்த படத்தின் வேலைகள் 2022 ல் துவங்கப்பட உள்ளது.

    பரியேறும் பெருமாள்

    பரியேறும் பெருமாள்

    மாரி செல்வராஜை டைரக்டராக அடையாளம் காட்டி, 2018 ம் ஆண்டு வெளிவந்த படம் பரிமேறும் பெருமாள். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் கதிர், ஆனந்தி ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இரு வேறு சாதிகளை சேர்ந்தவர்களுக்கு இடையேயான காதலை மையமாகக் கொண்ட படம் தான் பரிமேறும் பெருமாள்.

    ரீமேக் செய்யும் கரன் ஜோஹர்

    ரீமேக் செய்யும் கரன் ஜோஹர்

    இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமத்தை தான் கரன் ஜோஹர் பெற்றுள்ளாராம். தமிழில் பரிமேறும் பெருமாள் படத்தை போன்று, மலையாளத்தில் வெளிவந்த டிரைவிங் லைசென்ஸ் படத்தையும் ரீமேக் செய்யும் உரிமத்தையும் இவர் தான் பெற்றுள்ளார். இந்த படத்தை அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஸ்மியை இயக்கி வருகிறார்.

    விருதுகளை குவித்த படம்

    விருதுகளை குவித்த படம்

    ஆவணக் கொலைகளை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட பரியேறும் பெருமாள் படம், சிறந்த தென்னிந்திய திரைப்படத்திற்கான 66 வது ஃபிலிம் ஃபேர் விருது, நான்கு ஆனந்த விகடன் சினிமா விருதுகள், இரண்டு சைமா விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    தமிழில் சொல்லப்பட்டதை போல் அழுத்தமாக சாதி பிரச்சனைகளை கரன் ஜோஹர் எடுத்து வைப்பாரா, இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள், தமிழில் பெரிய அளவில் பேசப்பட்ட பரியேறும் பெருமாள் படம் இந்தியிலும் பேசப்படுமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

    English summary
    Latest reports says that mari selvaraj's hit movie pariyerum perumal to remake in hindi. kara johar gets the remake rights of this movie. he also gets remake rights of malayalam movie driving license.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X